சனி, 8 மார்ச், 2014

விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மேலும் ஒரு தொகுதி, சிதம்பரம் - திருவள்ளூரில் போட்டி!!

திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு,  தொகுதிப்பங்கீட்டு பேச்சுவார்த்தையின் போது சிதம்பரம் தொகுதி மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  முதலில் ஐந்து தொகுதிகள் கேட்டு கடைசியில் மூன்று தொகுதிகளில் பிடிவாதமாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பேச்சுவார்த்தையின் போது திருமாவளவன் திடீரென்று எழுந்து போனதாக செய்திகள் வந்தனர்.  பின்னர் சமாதானமாகி, ஒரு தொகுதிக்கான கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் திருமாவளவன்.ஒரே ஒரு தொகுதியை ஒதுக்கிய திமுகவுக்கு கண்டனம் தெரிவித்து,  தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை நடந்தபோதே,  அண்ணா அறிவாலயத்தில் வி.சி.க. தொண்டர் தீக்குளிக்க முயற்சித்தார்.  அவரை சமாதானம் செய்து அழைத்து சென்றார் திருமாவளவன்.இதையடுத்து நேற்று தமிழகத்தின் பல பகுதிகளிலும்  கலைஞர் மற்றும் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து உருவபொம்மை எரித்தனர் வி.சி.கவினர். திமுக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று வி.சி.க. அமைப்பாளர் பாவாணன் உள்பட வி.சி.கவினர் வலியுறுத்தி வந்தனர்.   இன்று இது குறித்து முடிவெடுக்க விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆலோசனை நடத்திவருகின்றனர்.இந்நிலையில்,  ’’திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மேலும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  தொகுதி ஒதுக்கீட்டை மு.க.ஸ்டாலின் உறுதி செய்தார்’’ என்று வி.சி.க. பொதுச்செயலாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக