சனி, 1 மார்ச், 2014

ஊழலில் தாண்டவமாடும் இந்தியா: அமெரிக்க பார்லிமென்ட்டில்அறிக்கை

வாஷிங்டன்: 'இந்தியாவில் அனைத்து மட்டங்களிலும், ஊழல் பரவியுள்ளது' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பல்வேறு நாடுகளில் உள்ள மனித உரிமை நடைமுறைகள் குறித்து, அமெரிக்க பார்லிமென்ட்டில், அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சர், ஜான்கெர்ரி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில், அமைச்சர் ஜான்கெர்ரி கூறியுள்ளதாவது:இந்தியாவில், நீதித்துறை முதல் அனைத்து மட்டங்களிலும் ஊழல் பரவியுள்ளது. ஊழலை தடுக்க, சட்டம் இருந்தும், அந்நாட்டு அரசு, அதை தீவிரமாக அமல்படுத்தவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரமுகர்கள், எளிதாக தண்டனையிலிருந்து விலக்கு பெற்று விடுகின்றனர். அமெரிக்காவில் 4% வேலை இல்லை அனால் இந்தியாவில் 36% வேலை இல்லை. அமெரிக்க சொன்னதில் என்ன தவறு இருக்கு. குற்றம் உள்ள நெஞ்சே குறுகுறுக்கும் . தயவு செய்து அமெரிக்கா உடன் இந்தியாவை அளவிட வேண்டாம்.
மத்திய புலனாய்வுத்துறை, கடந்த ஆண்டில், 583 ஊழல் வழக்குகளை பதிவு செய்துள்ளது. ஊழல் தொடர்பான புகார்களை பெறுவதற்காக, இலவச தொலைபேசி சேவையை, ஊழல் கண்காணிப்பு ஆணையம், அறிமுகப்படுத்தியது. இந்த நடவடிக்கையின் பேரில், 7,224 வழக்குகள், 2012ல் பதிவு செய்யப்பட்டன. இதில், 5,720 வழக்குகளில், விசாரணை மேற்கொள்ள பரிந்துரை செய்யப்பட்டது. ஊழலை ஒழிக்க, அரசு தரப்பில் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படாத காரணத்தால், தொண்டு நிறுவனங்கள், வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக, லோக்பால் மசோதா, பார்லிமென்ட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்தியாவில் உள்ள, பயங்கரவாதிகளும், நக்சலைட்டுகளும், கடத்தல், பாலியல் பலாத்காரம், போன்ற மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு- - காஷ்மீரில் தொடரும் வன்முறையால், 5.5 லட்சம் மக்கள், வேறிடங்களுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இவ்வாறு ஜான்கெர்ரி கூறியுள்ளார். இந்தியாவில், காணப்படும் மத கலவரங்கள் கவலையளிப்பதாக, அமெரிக்க வெளியுறவுத்துறை பெண் அதிகாரி, ஜென் சாகி தெரிவித்துள்ளார். குஜராத் கலவரங்களை அவர் மேற்கோள்காட்டி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக