சனி, 29 மார்ச், 2014

நடிப்பு மீது நம்பிக்கை இல்லாத மாணவி

நம்பிக்கையே இல்லாமல் நடிக்க
வந்திருக்கிறேன் என்றார் 10ம் வகுப்பு மாணவி மாளவிகா.
பார்வையற்றவர்களின் காதல் மற்றும் உணர்வுகளை மையமாக வைத்து ‘குக்கூ‘ படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் வெற்றி நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.  இயக்குனர் ராஜுமுருகன், தயாரிப்பாளர் சண்முகம், ஹீரோ தினேஷ், ஹீரோயின் மாளவிகா மற்றும் பட குழுவினர் பங்கேற்றனர். அப்போது மாளவிகா கூறியதாவது:
எனக்கு 16 வயது ஆகிறது. நடிக்க கேட்டு எனக்கு அழைப்பு வந்ததாக என் தந்தை கூறினார். கேலி செய்கிறார் என்று எண்ணினேன். பிறகுதான் அது உண்மை என்று தெரிந்தது. எனக்கு நடிப்புபற்றி எதுவும் தெரியாது. நம்பிக்கையே இல்லாமல் இயக்குனர் ராஜூ முருகனை சந்தித்தேன். பார்வையற்ற பெண்ணாக நடிக்க வேண்டும்.


உன்னால் முடியும் என்று நம்பிக்கையுடன் கூறினார். அப்போதுகூட எனக்கு நம்பிக்கை வரவில்லை. பயந்துகொண்டே ஒப்புக்கொண்டேன். பட குழுவினர் குடும்பம்போல் பழகியதில் சகஜமாக நடிக்க முடிந்தது. இந்த கதாபாத்திரத்துக்காக பார்வையற்ற மாற்று திறனாளிகளுடன் நான் ஒரு வாரம் நேரில் பழகி பயிற்சி எடுத்தேன். அவர்கள் வாழ்க்கை சோகமாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். அந்த உணர்வு எனக்கும் வந்தது. இதனால் நன்றாக நடிக்க முடிந்தது. - tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக