சனி, 29 மார்ச், 2014

அழகிரி : முத்துராமலிங்கத்தை தோற்கடியுங்கள் ! திமுக 4-வது இடத்திற்குப் போக வேண்டும் !!! ?

உசிலம்பட்டி: லோக்சபா தேர்தலில் தேனி தொகுதி திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கத்தை வரும் தேர்தலில் படுதோல்வி அடையச்செய்ய வேண்டும் என்று திமுகவில் இருந்து நீக்கப்பட்ட மு.க. அழகிரி கூறியுள்ளார். மேலும் இத் தேர்தலில் திமுக 4-வது இடத்திற்குப் போக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். திமுக.,வில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரி, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தி.மு.க. நகர பொறுப்பாளர் அஜித் பாண்டியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அவரது தந்தை இறப்பிற்கு துக்கம் விசாரித்தார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி சவுந்திரபாண்டியன் மனைவி இறந்ததையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற மு.க.அழகிரி, அவரிடமும் துக்கம் விசாரித்தார்.;பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரசை மன்னிக்க தயார் என கருணாநிதி தான் சொல்லி இருக்கிறார்; காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கப் போவதாக நான் ஒரு போதும் கூறவில்லை என்றார். மேலும் தேனி தொகுதி திமுக வேட்பாளர் பொன். முத்துராமலிங்கத்தை வரும் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்து அவருக்கு 4வது இடத்தை பெற்றுத்தர வேண்டும். என தமது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார் தி.மு.க. வேட்பாளரை தோற்கடிக்க வேண்டும் என்ற மு.க.அழகரி பேசி உள்ளது அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக