மதுரை: மு.க. அழகிரியும், மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரமும் திடீர்
என்று சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க. அழகிரியை பல்வேறு
கட்சியினர் சந்தித்து ஆதரவு கோரி வருகின்றனர். இந்நிலையில் சென்னை சென்று
தனது தாய் தயாளு அம்மாள் மற்றும் தங்கை கனிமொழியை சந்தித்த அழகிரி
அங்கிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் மதுரை வந்த அதே ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் மத்திய நிதி அமைச்சர் ப.
சிதம்பரமும் பயணம் செய்தார். மதுரை விமான நிலையத்திற்கு வந்த உடன் அவர்கள்
இருவரும் விஐபி பயணிகள் காத்திருக்கும் இடத்திற்கு சென்று சிறிது நேரம்
பேசினர். அதன் பிறகு அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் எதுவும்
தெரிவிக்காமல் சென்றுவிட்டனர்.
அழகிரியை பல்வேறு கட்சியினர் சந்தித்து ஆதரவு கோரி வருவதால் அவர் தேர்தல்
வேலையில் வெளிநாட்டுக்கு செல்லப் போவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தான்
சிதம்பரம், அழகிரி சந்திப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக