செவ்வாய், 4 மார்ச், 2014

பாலியல் பலாத்காரம்: சர்ச்சைக்குரிய சோதனை முறைக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி


பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் முறையில் மத்திய சுகாதார அமைச்சகம் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
மேலும், பல்வேறு தரப்பினராலும் எதிர்க்கப்படும் 'இரட்டை விரல் சோதனை' (two-finger test) என்ற சர்ச்சைக்குரிய சோதனை நடைமுறைக்கு அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
சுகாதார ஆராய்ச்சித் துறையும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் (ICMR) இணைந்து நிபுணர்கள் உதவியுடன் பாலியல் அத்துமீறலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவச் சோதனை முறையில் திருத்தம் ஏற்படுத்தியுள்ளதோடு, மருத்துவ நடைமுறைகளையும் வகுத்துத் தந்துள்ளது.

இதன் மூலம் ஏற்கெனவே பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவச் சோதனை என்ற முறையில் மேலும் துன்புறுத்தப்படுவது தடுத்து நிறுத்தப்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ நிபுணர்களின் பரிந்துரை, பாலியல் வன்முறைக்கு ஆளானவர்களை கையாளும் மருத்துவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நடைமுறைகள் படி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்களை பரிசோதனை செய்ய தனியாக ஒரு அறை இருக்க வேண்டும், சோதனை செய்யும் போது மருத்துவரைத் தவிர மூன்றாவது நபர் யாரும் இருக்கக் கூடாது, மருத்துவர் ஆணாக இருந்தால் ஒரு பெண் செவிலி உடன் இருக்க வேண்டும் ஆகிய வரைமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக