செவ்வாய், 4 மார்ச், 2014

ஸ்டாலினிடம் பேசினார் சோனியா? கூட்டணிக்கு இறுதி கட்ட முயற்சி!


சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கூட்டணி தொடர்பாக இறுதி கட்ட முயற்சிகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மு.க. ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் பிரபு. சோனியாவின் குட்புக்கில் இருப்பவரும் கூட. தமது பங்குக்கு திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு பிரபுவும் முயற்சித்திருக்கிறார். ஆனால் ஸ்டாலினோ எத்தனை எத்தனை பிரச்சனைகளில் தமிழகத்தின் உணர்வை காங்கிரஸ் மதிக்கவே இல்லை.. அதனால் எப்படி கூட்டணி அமைப்பது என்று பிரபுவிடம் ஸ்டாலின் கேட்டிருக்கிறார். ஸ்டாலினிடம் பேசினார் சோனியா? கூட்டணிக்கு இறுதி கட்ட பகீரத முயற்சி! இதற்கு பதில் சொல்ல முடியாத பிரபு, சோனியாவின் லைனுக்குப் போய் பேசினாராம். பின்னர் பிரபுவின் போனில் இருந்தபடியே ஸ்டாலினுடன் சோனியா பேசி இருக்கிறார். சில விஷயங்கள் தமக்கு தெரியாமல் நடந்ததால் வருந்துகிறேன்.. ராகுலை கூட்டணிக்காக அனுப்புகிறேன். வலுவான கூட்டணி அமைக்கலாம் என்றெல்லாம் சோனியா கூறியதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஸ்டாலினோ அப்பாவிடம் கேட்டு சொல்கிறேன் என்று எஸ்கேப்பாகிவிட்டார் என்கிறது தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள். இதை மு.க. ஸ்டாலின் தரப்பும் உண்மை என்கிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக