புதன், 26 மார்ச், 2014

கருணாநிதி வீட்டில் அழகிரி திடீர் வருகையால் பரபரப்பு

திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி இன்று காலையில் மதுரையில் இருந்து சென்னை வந்தார்.  இன்று மாலை திமுக தலைவரும், தந்தையுமான கலைஞர், சிந்தாதிரிப்பேட்டையில் மக்களை தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
இதைத்தெரிந்து கொண்ட அழகிரி, கலைஞர் இல்லாத சமயத்தில் கோபாலபுரம் சென்றார். அங்கே, தன்னு டைய தாயார் தயாளு அம்மாளை சந்தித்தார்.
 தாயாரின் உடல் நலம் குறித்து விசாரித்த அழகிரி, உருக்கமாக சில விசயங்களை அவரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.  இந்த  சந்திப்பு 20 நிமிடங்கள் நடந்தது.   பின்னர், தாயாரிடம் விடைபெற்றுக் கொ ண்டு,  லை,சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக