தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் திராவிட இயக்க
எதிர்ப்பு என்கிற பெயரில் தொடர்ந்து திமுக வை மட்டும் கடுமையாக எதிர்த்து
வருகிறார்கள். அதில் ஒரு ‘பார்ப்பன பிண்ணனி இருக்கிறது’ என்று பலர்
குற்றம்சாட்டினால்… உடனே அனுமார் போல் தங்கள் இதயத்தை பிளந்து காட்டி..
‘யாரு நானா?’ என்றும் சீறுகிறார்கள்.
ஆனாலும் இவர்களுக்கு தொடர்ந்து சோதனை
வைக்கும் முயற்சியில் இம்முறையும் பிராமணர் சங்கம், அதிமுகவை ஆதரிப்பதாக
அறிவித்திருக்கிறது. அதுவும் ‘பெரியாரை செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன
எச். ராஜாவை மட்டும் சிவகங்கையில் ஆதரிப்பது’ என்றும் சிறப்பு சலுகை
செய்திருக்கிறது?
இது குறித்து திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள், அதிமுகவை அல்ல.. பிராமணர் சங்கத்தையாவது கேலி செய்திருக்கிறார்கள்?
அதிமுகவை கூட விமர்சித்து விடுவார்கள். ஆனால், பிராமணர் சங்கத்தை..? ‘பார்ப்பான்’ என்கிற வார்த்தையே வராது.. அப்புறம்…?
திராவிட இயக்க அரசியல் என்கிற பெயரில்
பார்ப்பன எதிர்ப்பு பேசுகிறவர்களின் சுயஜாதி உணர்வை கேள்விக் கேட்டதின்
மூலம், பார்ப்பனர்களின் கவனத்தை கவர்ந்த இவர்கள்…
தமிழ்த்தேசியத்தின் பேரில் சுயஜாதி
பாசத்தோடு இருந்து கொண்டு.. தீவிர பார்ப்பன அடிமைகளாக இருப்பதை
கண்டித்ததில்லை.. ஏனென்றால் இவர்களே அப்படித்தானே?
‘இதுதான் பெரியார் மண்ணிண் யோக்கியதையா?’
என்று பிராமணர் சங்கத்தின் அதிமுக ஆதரவையும் ‘பார்ப்பன கவன ஈர்ப்பு
தீர்மான’த்தில் கொண்டு வந்து விடுவார்களோ? அப்படியாவது கொண்டு வாங்களேன்
பாக்கலாம்..?
*
எதுவாக இருந்தாலும் பயணப் படி, Increment எல்லாம் உண்டு. job confirm பண்ணி ரொம்ப நாளாச்சுங்க.. mathimaran.wordpress.com
*
எதுவாக இருந்தாலும் பயணப் படி, Increment எல்லாம் உண்டு. job confirm பண்ணி ரொம்ப நாளாச்சுங்க.. mathimaran.wordpress.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக