திங்கள், 3 மார்ச், 2014

பெண் இன்ஜினியரை கொலை செய்தது எப்படி? நடித்து காட்டினர் வாலிபர்கள்

சென்னை : சிறுசேரி சாப்ட்வேர் பெண் ஊழியர் உமா மகேஸ்வரியை பலாத்காரம் செய்தது எப்படி என்று கைதான மே.வங்கத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் நேற்று நடித்து காட்டினர்.சென்னை அடுத்த சிறுசேரி சிப்காட் வளாகத்தில், சில தினங்களுக்கு முன்பு சாப்ட்வேர் பெண் ஊழியர் உமா மகேஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி, மேற்கு வங்க வாலிபர்கள் உஜ்ஜவ் மண்டல், உத்தவ் மண்டல், ராம் மண்டல் ஆகியோரை கைது செய்தனர். இவர் களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க செங்கல்பட்டு கோர்ட் அனுமதி அளித்தது. அதன்படி சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி, டிஎஸ்பி வீரமணி, தாழம்பூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர், போலீஸ் காவலில் கொண்டு வரப்பட்ட 3 பேரையும் நேற்று காலை 10 மணிக்கு, சம்பவம் நடந்த சிறுசேரி சிப்காட் பகுதிக்கு அழைத்து சென்றனர்.அங்கு உமா மகேஸ்வரி நடந்து வந்தது, அவரை தாக்கி புதர் பகுதிக்கு தூக்கி சென்றது, கழுத்தை அறுத்தது, வயிற்றில் கத்தியால் குத்தியது போன்றவற்றை 3 பேரும் நடித்து காட்டினர். பலாத்காரம் செய்த இடம் மற்றும் மூவரும் தங்கியிருந்த இடம் ஆகியவற்றையும் அடையாளம் காட்டினர்.dinakaran.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக