ஞாயிறு, 2 மார்ச், 2014

தவிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ! அ.தி.மு.க., மவுனம் ?

அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, எத்தனை தொகுதிகள் என்பதையும், அதற்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, எப்போது நடைபெறும் என்பதையும், முதல்வர் ஜெயலலிதா அறிவிக்காததால், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்களும், தவிப்பில் உள்ளனர். அதேநேரத்தில், கம்யூனிஸ்ட் கட்சிகள் கேட்கும் தொகுதிகளுக்கு, அறிவிக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., வேட்பாளர்களும் பதற்றத்தில் உள்ளனர். தலா மூன்று தொகுதி: அ.தி.மு.க., பொதுச் செயலரான, முதல்வர் ஜெயலலிதா, கடந்த ஆண்டு டில்லி சென்ற போது, 'லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிடும்' என, அறிவித்தார். அத்துடன், ஜூனில் நடந்த, ராஜ்யசபா தேர்தலில், ஐந்து இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். அதன்பின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், ஜெயலலிதாவுடன் பேச்சு நடத்தி, ஒரு இடத்தை பெற்றனர். அ.தி.மு.க., வேட்பாளர் ஒருவர், வாபஸ் பெற்றார். அடுத்து வந்த ராஜ்யசபா தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, ஒரு இடத்தை அ.தி.மு.க., விட்டுக் கொடுத்தது. சாடிஸ மனப்பான்மை கொண்டவர் எப்படி நடந்து கொள்வார் என்று தெரியாமலா இருக்கிறார்கள் காம்ரேடுக்கள்  அம்மான்னா சும்மாவா எவ்வளவு பெரிய கொம்பனா இருந்தாலும் வாலை சுருட்டிக்கிட்டு கம்முன்னுதான் இருக்கனும் ஃ விரும்பினால் போனா போகுதுன்னு ஆளுக்கு ஒரு தொகுதி் தருவாங்க ஃ அப்படியே தரலைன்னாலும் தோழர்கள் பாவம் என்ன பண்ண முடியும் ஃ இருந்த கொஞ்சநஞ்ச மானம் ரோசம் சூடு சொரணை எல்லாத்தையும் அம்மா காலடியில் விழுந்து அடமா னம் வச்சிட்டீங்க 
இதையடுத்து, லோக்சபா தேர்தலுக்கான, அ.தி.மு.க., கூட்டணியில், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம்பெறலாம் என்ற தகவல் பரவியது. அத்துடன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தேசியத் தலைவர்களும், முதல்வரை சந்தித்து பேசி, மூன்றாவது அணிக்கு அழைத்தனர்; முதல்வரும் சம்மதித்தார். அ.தி.மு.க., கூட்டணியில், கம்யூனிஸ்ட்டுகள் இடம் பெறும் என்றும், பதிலுக்கு அறிவித்தார். அ.தி.மு.க., சார்பில், தொகுதி பங்கீடு குறித்து பேச, நான்கு அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர், பிப்., 5ம் தேதி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியினரிடமும், தனித்தனியே பேச்சு நடத்தினர். அப்போது, கம்யூனிஸ்ட் கட்சியினர், தலா மூன்று தொகுதிகளை ஒதுக்க வேண்டும் எனக்கோரி, அதற்கான பட்டியலை அளித்தனர். அ.தி.மு.க., தரப்பிலோ, தலா, ஒரு 'சீட்' தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், ஏமாற்றம் அடைந்த, கம்யூனிஸ்ட் கட்சியினர், அடுத்த கட்டமாக பேசிக்கொள்ளலாம் என, புறப்பட்டுச் சென்றனர். அத்துடன், அன்றைய பேச்சுவார்த்தை முடிந்தது. அதன்பின், இதுவரை அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.


இந்நிலையில், கடந்த, 24ம் தேதி, தன் பிறந்த நாளன்று, 40 தொகுதிகளுக்கும், வேட்பாளர்களை அறிவித்தார், முதல்வர் ஜெயலலிதா. அப்போது, 'கம்யூ., கட்சிகளுடன், தொகுதி பங்கீடு, பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. உடன்பாடு காணப்பட்டதும், கம்யூ., கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படுவர்' என, அறிவித்தார். தொகுதி உடன்பாடு ஏற்படுவதற்கு முன், அ.தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்தது, கம்யூனிஸ்ட் கட்சியினரிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இருந்தாலும், அதை வெளிக்காட்டாமல், உள்ளுக்குள்ளேயே புழுங்கினர். கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில், நாகப்பட்டினம், தென்காசி, கோயம்புத்தூர், மதுரை, திருப்பூர், கன்னியாகுமரி, ஆகிய தொகுதிகளை கேட்டுள்ளனர். முதல்வர், தங்களுக்கு கேட்ட தொகுதி யை தருவார் என, நம்பினர். ஆனால், இன்னமும், அ.தி.மு.க.,வில் இருந்து, இரண்டாவது கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கான, அழைப்பு எதுவும் வரவில்லை. இதனால், சொல்ல முடியாத தவிப்பில், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளனர்.





செலவு வீணாகிவிடுமோ:
அதேநேரத்தில், கம்யூனிஸ்ட்களுக்கு, எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது தெரியாததால், அந்த தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, அ.தி.மு.க., வேட்பாளர்கள், 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ' என்ற கலக்கத்தில் உள்ளனர். மேலும், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள், தொகுதியில் உள்ள, கட்சி நிர்வாகிகளை சந்தித்து, சால்வை அணிவித்து வருகின்றனர். அதற்கு குறிப்பிட்ட தொகை செலவாகிறது. இந்த செலவு வீணாகிவிடுமோ என்ற அச்சத்திலும், அவர்கள் உள்ளனர். எனவே, முதல்வர், விரைவாக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை முடிக்க வேண்டும் என, இரு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.


- நமது சிறப்பு நிருபர்  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக