திங்கள், 10 மார்ச், 2014

அம்மாவின் சொல்படி தாபா கட்சி தனித்து போட்டி ! வேற வழி ?

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனித்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் அதன் பொதுச்செயலாளரான சுதாகர் ரெட்டியின் தலைமையில் நடைபெற்றது. அப்போது பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுவது எனவும் ஒரு சில தொகுதிகளில் திமுகவுடன் இணைந்து போட்டியிடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக அக்கட்சி தமிழக தலைவரான தா.பாண்டியன் தெரிவித்தார். தாங்கள் போட்டியிடாத தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக செயல்படும் கட்சிக்கு வாக்களிக்க உள்ளதாகவும் தா.பாண்டியன் கூறினார்.maalaimalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக