வெள்ளி, 14 மார்ச், 2014

விஜயகாந்த் :ஏன் டாஸ்மாக்கிற்கும் மட்டும் அம்மா பெயர் வைக்கல ?

வடசென்னை தொகுதிக்குட்பட்ட கொளத்தூரில் வடசென்னையில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளார் சவுந்தரபாண்டியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார் அக்கட்சியின் தலைவர் விஜய காந்த்.
பிரச்சாரத்தில் அவர், ‘’ஆனா ஊனா கோடநாடு போய் உட்கார்ந்துக்கிறாங்க.  மந்திரிங்க எல்லாம் அவுங்க காலிலே விழுறாங்க.    மக்களுக்கு நல்லது செய்தா நானே காலில் விழுவேன். செய்யமாட்டேங்குறாங்களே.
என் எம்.எல்.ஏக்களை எல்லா மிரட்டி கூப்பிடுறாங்க. அதே நேரத்தில மிரட்டி மிரட்டியே எல்லோரையும் அழைச்சுக்க முடியுமா என்ன?  தொகுதி நன்மைக்காக போனேன்னு அங்க போன எம்.எல்.ஏக்கள் சொன்னாங்க.  தொகுதிக்கு நன்மை கிடைச்சிச்சா என்ன?
ஆடு தர்றோம், மாடு தர்றோம், குவா குவா வாத்து தர்றோம்னு சொல்லுறாங்க.  மனுசங்க குடிக்கிறதுக்கே தண்ணி இல்ல.  அப்படி எப்படி மிருகங்கள் வாழும்.
இதுக்கெல்லாம் காரணம் யார்? நீங்கதான்.  நீங்க அமைதியா இருக்கிறதுனாலதான் அவுங்களுக்கு துளிர் விட்டுப்போச்சு.  அஞ்சு வருசம் ஒழுங்கா ஆட்சி பண்ணியிருந்தா எதுக்கு இப்ப வந்து  மக்கள்கிட்ட கெஞ்சணும்.   திமுகவும் அதிமுகவும் ஒழுங்கா ஆட்சி பண்ணியிருந்தா தேமுதிக எதுக்கு வரணும்.
ஒவ்வொன்னுக்கும் ஒரு விலை வைக்கிறாங்க.  அதுக்கு பேரு விலையில்லா பொருட்களாம்.  சிந்திக்கணும் மக்களே.  இந்தியா ஏழை நாடு ஏழை நாடுன்னு சொல்லி சொல்லியே கொள்ளை அடிக்கிறாங்க. 
மாற்றாந்தாய் மனப்போக்கு என்று காங்கிரசை நீங்க சொல்லலாம், கையாலாகாத பிரதமர் என்று மன்மோகன்சிங்கை இவுங்க சொல்லலாம்.  ஆனா இவுங்கள மட்டும் நாங்க எதுவும் சொல்லக்கூடாதாம்.  உடனே வழக்கு போடுறாங்க.
அம்மா குடிதண்ணீர், அம்மா உணவகம்னு பெயர் வச்சிருக்காங்க.   ஆனா, டாஸ்மாக்கிற்கும் மட்டும் அப்படி பெயர் வைக்கல.  ஏன் இவுங்க அண்ணா பெயரையும், எம்.ஜி.ஆர். பெயரையும் வைக்கல.  அம்மா பெயர் மட்டும் இருக்கு. 
சிறு முதலாளிகள் தொழிலில் கை வைச்சிட்டாங்க.  இட்லி சுட்டு பொழச்சிக்கிட்டு இருந்த ஆயாக்கள் எல்லாம் பாவம்.  அவுங்க பொழப்ப கெடுத்துடிச்சி அம்மா உணவகம். இந்த உணவகத்தால குடிக்கிற வங்களுக்கு நல்ல சைடிஷ் கொடுக்குறாங்க’’ என்று பேசினார். nakkheeran.in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக