வெள்ளி, 14 மார்ச், 2014

ராமா உட்பட 50 பெயர்களைத் தடை செய்துள்ள சவுதி அரேபிய அரசு

சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் தங்கள் நாட்டின் கலாச்சாரம் மற்றும் சமயத்திற்கு முரண்பாடாகக் கருதும் 50 பெயர்களை அந்நாட்டில் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிவில் விவகாரத்துறை தடை செய்யப்பட்ட பெயர்களை அறிவித்தபின் அங்கு வசிக்கும் பெற்றோர்கள் இனி தங்களின் குழந்தைகளை லிண்டா, ஆலிஸ், எலைன் அல்லது பின்யாமின் என்று அழைக்கமுடியாது. இதில் பெஞ்சமின் என்று பொருள்படும் அரபுப் பெயரான பின்யாமின் என்பது இஸ்லாமிய முறைப்படி யாகோபின் மகன் பெயரென்று குறிப்பிடப்படுகின்றது. இது தற்போதைய இஸ்ரேலியப் பிரதமரான பெஞ்சமின் நேதன்யாஹுவையும் குறிக்கும்.


பட்டியலில் வெளியிடப்பட்டுள்ள வேறு சில பெயர்கள் மதத்தை நிந்திப்பவை, அரபு மொழி சார்ந்திருக்கவில்லை, இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரானவை அல்லது நாட்டின் கலாச்சாரம், சமயத்திற்கு எதிரானவை என்ற கருத்தில் தடை செய்யப்பட்டுள்ளதாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது. சில பெயர்கள் வெளிநாட்டவை அல்லது பொருத்தமற்றவை என்ற பிரிவின் கீழ் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல் அரச குடும்பத்தினரைக் குறிக்கும் சுமுவ், மலேக், மலிகா போன்ற பெயர்களும் பொதுமக்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் சில பெயர்கள் என்ன காரணத்திற்காகத் தடை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த யூகங்களை எழுப்பும் விதமாகக் அமைந்திருந்தன. அமைச்சகம் வெளியிட்டுள்ள பெயர்ப் பட்டியலில் ராமா என்ற பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.The full list of forbidden names as reported in Gulf News is listed below:

Malaak (angel)

Abdul Aati

Abdul Naser

Abdul Musleh

Binyamin (Arabic for Benjamin)

Naris

Yara

Sitav

Loland

Tilaj

Barrah

Abdul Nabi

Abdul Rasool

Sumuw (highness)

Al Mamlaka (the kingdom)

Malika (queen)

Mamlaka (kingdom)

Tabarak (blessed)

Nardeen

Sandy

Rama (Hindu god)

Maline

Elaine

Inar

Maliktina

Maya

Linda

Randa

Basmala (utterance of the name of God)

Jibreel (angel Gabriel)

Abdul Mu'een

Abrar

Iman

Bayan

Baseel

Wireelam

Nabi (prophet)

Nabiyya (female prophet)

Amir (prince)

Taline

Aram

Nareej

Rital

Alice

Lareen

Kibrial

Lauren

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக