காங்கிரஸ் ஊழல் கட்சி, பா.ஜனதா மதவாத கட்சி, மார்க்சிஸ்ட் அழிவு தரும் அரசியலை நடத்துகிறது: மம்தா
மேற்கு
வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி
பாய்லனில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு தொண்டர்களிடையே
உரையாற்றினார்.
அப்போது,
பா.ஜனதா அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பே மோடிதான் பிரதமர் என்று சிலர்
கூறிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல. அவர்களுக்கு எங்கே
மெஜாரிட்டி கிடைக்கும்? நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் கணிப்பு
பிசுபிசுத்துப்போகும். மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில்
அவர்களின் செல்வாக்கு மிக குறைவாகவே உள்ளது.
காங்கிரஸ்
ஊழல் கட்சி, பா.ஜனதா மதவாத கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ அழிவு
தரும் அரசியலை நடத்துகிறது. நாங்கள் மதவாதத்துக்கு எதிராக போராடி
வருகிறோம். மூன்றாவது அணி என்று அழைக்கப்படும் சந்தர்ப்பவாத கூட்டணி
நிலையற்ற தன்மையை மட்டுமே கொண்டு வரும். மத்திய முன்னணியால் மட்டுமே
நிலையான அரசைக் கொடுக்க முடியும். தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ்,
பா.ஜனதாவை அடுத்து மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக நாம் உருவெடுப்போம்“
என்றும் மம்தா நம்பிக்கை தெரிவித்தார்.nakkheeran.in/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக