ஞாயிறு, 2 மார்ச், 2014

ஊழலுக்கு எதிரான அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்?


மத்திய அமைச்சரவைக் கூட்டம்! அவசரச் சட்டம் பற்றி ஆலோசனை!
மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் நடைபெறுகிறது.
ஊழலுக்கு எதிரான அவசர சட்டத்திற்கு இந்தக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊழல் ஒழிப்பு மசோதா, வன்கொடுமை தடுப்பு சட்டத்திருத்த மசோதா, மாற்றுத்திறனாளிகள் உரிமைகளுக்கான மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை 15வது மக்களவையின் கடைசி கூட்டத்தொடரான குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முயற்சித்தது.
ஆனால், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் இந்த மசோதாக்களை திட்டமிட்டப்படி நிறைவேற்ற முடியவில்லை. கூட்டத்தொடரை நீட்டிக்க மத்திய அரசின் ஆலோசனையும் எதிர்க்கட்சிகள் நிராகரித்தன.
இதனையடுத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த மசோதாக்களை அவசர சட்டமாக கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக