ஞாயிறு, 30 மார்ச், 2014

சவூதி பெண்ணுரிமை போராளிக்கு விருது வழங்கி கவுரவித்த ஒபாமா

ஒரு நாள் அரசு முறை பயணமாக நேற்று தலைநகர் ரியாத்தை வந்தடைந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, சவூதி மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஜீஸ் அல் சவூத்-தை சந்தித்து பேசினார். நேற்றிரவு இங்கு ஓய்வெடுத்த ஒபாமா, சவூதியில் குடும்பத்தை சேர்ந்த ஆண்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிவரும் பெண்ணியக்கவாதி குழுவினரை சந்தித்து பேசினார். கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து சவூதி பெண்களின் மேம்பாட்டுக்காக பாடுபட்டு வரும் பெண்ணுரிமை போராளியான மஹா அல்-முனீஃப்,  இந்த ஆண்டுக்கான அமெரிக்க அரசின் பெண்ணுரிமை போராளி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இந்த சந்திப்பின்போது அந்த விருதினை மஹாவுக்கு வழங்கிய ஒபாமா, அவரது தொண்டு மென்மேலும் சிறக்க வாழ்த்தினார்.maalaimalar.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக