புதன், 5 மார்ச், 2014

40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., தனித்து போட்டி? கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் அதிருப்தி ! தி.மு.க., கூட்டணியில் இணைவது குறித்து குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் ?

காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு, ஓட்டு போட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த, முதல்வர் ஜெயலலிதா, நேற்று, மீனம்பாக்கத்தில் நடந்த, பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார். இதன் மூலம், கம்யூனிஸ்ட் கட்சி களை, அ.தி.மு.க., கழற்றிவிட முடிவு செய்திருப்பது உறுதியானது.
அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று முன்தினம், காஞ்சிபுரத்தில், முதல்வர் ஜெயலலிதா, தேர்தல் பிரசாரத்தை துவக்கினார். நேற்று, இரண்டாவது நாளாக, ஸ்ரீபெரும்புதூர் தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் கே.என்.ராமச்சந்திரனை ஆதரித்து, சென்னை, மீனம்பாக்கத்தில் நடந்த, பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார். காஞ்சிபுரத்தில், அவர் பேசும்போது, ''மத்தியில், நடைபெறும், ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதன் மூலம் மக்களாட்சி மலர வேண்டும். அந்த ஆட்சி, தமிழகத்தின் ஆட்சியாக, நமது ஆட்சியாக, அ.தி.மு.க., அங்கம் வகிக்கும் ஆட்சியாக, அமைய வேண்டும். அப்போது தான், தமிழர்களின் உரிமை நிலைநாட்டப்படும். தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறும். இதன் அடிப்படையில், நீங்கள் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு, ஓட்டளிக்க வேண்டும்,'' என்றார்.  தாயே பிச்சை போடுங்கள் என்று கேட்டு விட்டீர்கள். சாதம் ஆகும் வரை, அதாவது தேர்தல் முடியும் வரை பொறுமையாக இருக்க முடியாதா? 80 வயதுக்கு மேல் ஆன தா. பா. எம்பி ஆகி தமிழக மக்களுக்கு என்ன சேவை செய்து கிழிக்க போகின்றார்? சேராத இடம் தன்னில் சேர்த்தல் இதுதான் கதி. போன சட்டமன்ற தேர்தலில் அவமான பட்டபின்பும் புத்தியில் ஏறவில்லை என்றால், இந்த மாதிரி செருப்படிதான் போயஸ் தோட்டத்தில் கிடைக்கும்.
நேற்று பேசியதாவது:
மத்தியில் மாற்றத்தை கொண்டு வர, என் கரங்களை, நீங்கள் பலப்படுத்த வேண்டும். அதாவது, அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களை, நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இதை நீங்கள் நிச்சயம் செய்வீர்கள் என்பதில், எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. கட்டுக்கடங்காத, விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதே, மக்களுக்கு எப்போதும் பயன் அளிக்கக் கூடியதாகும். இதற்கு, மத்திய அரசின், பொருளாதாரக் கொள்கைகளில், மாற்றம் தேவை. இந்த மாற்றத்தை செய்ய, அ.தி.மு.க., கரங்களை வலுப்படுத்தி, அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களை, நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு, முதல்வர் பேசினார்.


முதல் நாள் கூட்டத்தில், அ.தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு, ஓட்டு போடும்படி வேண்டுகோள் விடுத்த முதல்வர், நேற்று, அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, ஓட்டு போடுங்கள் என்றார். அதற்கேற்ப, 40 லோக்சபா தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்கள், ஓட்டு வேட்டையை, துவக்கி உள்ளனர். இதன் மூலம், அ.தி.மு.க., தனித்துப் போட்டியிடுவது, உறுதியாகி உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகளுடன், கூட்டணி அமைப்பதாக, கடந்த மாதம், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், கடந்த மாதம் 5ம் தேதி, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அமைச்சர்களுடன், முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இரண்டு கட்சியினரும், நான்கு தொகுதிகளை கேட்டு உள்ளனர். ஆனால், அ.தி.மு.க., சார்பில், ஒரு தொகுதி மட்டும் ஒதுக்குவதாக தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு, கம்யூனிஸ்ட் கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். அதன்பிறகு, அதிகாரப்பூர்வமாக பேச்சு வார்த்தை, எதுவும் நடைபெற வில்லை. அ.தி.மு.க., அழைப்பை எதிர்பார்த்து, கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருந்தனர். ஆனால், கம்யூ னிஸ்ட் கட்சிகள், ஒரு தொகுதிக்கு, ஒப்புக் கொள்ளாவிட்டால், தனித்துப் போட்டியிடுவோம் என அறிவிப்பது போல், அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யும்படி, மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இது, கம்யூனிஸ்ட் கட்சியினரிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, ஆலோசித்து வருகின்றனர். இன்று, அவர்கள் முடிவை அறிவிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெறாத, கம்யூ னிஸ்ட் கட்சியினர், வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைப்பரா அல்லது தனித்துப் போட்டியிடுவரா? என்பது, இன்று தெரிந்து விடும்.





வேதனையின் உச்சத்தில் மார்க்சிஸ்ட்கள்:
லோக்சபா தேர்தல் குறித்து விவாதிக்க, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின், இரண்டு நாள், மாநிலக் குழுக் கூட்டம், சென்னையில் நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று நடந்த கூட்டத்தில், மாநில குழு உறுப்பினர்கள் பேசியதாவது: கூட்டணி என்ற பெயரில், அ.தி.மு.க.,வினர் நம்மை அலைக்கழிக்கின்றனர். அந்தக் கட்சியின், தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேசவே முடியவில்லை. எதற்கெடுத்தாலும், 'அம்மா'வை கேட்டு சொல்கிறோம் என, அவர்கள் கூறுவதால், தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வராமல் இழுத்தடிக்கிறது. மாநில குழு உறுப்பினர்களின் புலம்பலை கேட்ட, கூட்டத்தில் பங்கேற்றிருந்த, கட்சியின் மேலிட பார்வையாளர், வரதராஜன், 'அ.தி.மு.க., உடனான, கூட்டணி விஷயத்தில், எந்த முடிவையும், அவசரப்பட்டு எடுத்து விடக்கூடாது' என, அமைதிப்படுத்தியுள்ளார். கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க., தேர்தல் பிரசாரத்தை துவக்கி விட்டது. தொகுதிப் பங்கீடு முடிவாகாததால், பிரசார கூட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. எதிர்க்கட்சியினரின் கேலி, கிண்டலுக்கு நாம் ஆளாகியுள்ளோம். அதனால், தொண்டர்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளனர். தி.மு.க., கூட்டணியில் இணைந்தால், நமக்கு, மூன்று 'சீட்'டுகள் கிடைக்கும். அத்துடன் மரியாதையாகவும் நடத்துவர். ஆனால், அ.தி.மு.க.,வினர் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர், நம்மை ஒரு புழுவை விட கேவலமாக நடத்துகின்றனர். அது மிகுந்த வேதனை தருவதாக உள்ளது. இவ்வாறு, அவர்கள் பேசினர்.


இதன்பின் பேசிய, மாநில நிர்வாகி ஒருவர், 'ஒரு சீட் தான் தருவோம் என, அ.தி.மு.க., கூறினால், அதை ஏற்க முடியாது. அதற்கு, இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்து போட்டியிடுவதே மேல்' என, தெரிவித்துள்ளார். இதனால், மேலும், மேலும் அவமரியாதை செய்யும், அ.தி.மு.க., உடன், கூட்டணியில் நீடிப்பதா அல்லது '2ஜி' ஊழல் விவகாரத்தை பொருட்படுத்தாமல், தி.மு.க., கூட்டணியில் இணைவதா என்பது குறித்து, இரண்டாவது நாளாக, இன்று நடக்கும் மாநில குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என, மார்க்சிஸ்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக