செவ்வாய், 11 மார்ச், 2014

காங்கிரஸ் 39 தொகுதிகளிலும் போட்டி ! வாசன் போட்டியிடவில்லை !

சென்னையில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
காங்கிரஸ் கட்சியின் வாக்கு வங்கி பாரம்பரியமிக்க ஒன்று. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரமான கணிசமான வாக்கு வங்கி எப்பொழுதும் உள்ளன. காங்கிரஸ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட நல்ல சந்தர்ப்பம் அமைந்துள்ளது. கூட்டணி பற்றி தமிழக காங்கிரஸ் தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் சர்ந்தர்ப்பவாத கூட்டணி அமைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்காத கட்சிகள் தேர்தலுக்குப் பின்னர் வருத்தப்படும். காங்கிரஸ் கட்சியில் சேருபவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு ?தமிழக அரசியலில் நகைச்சுவைக்கு தற்போது நல்ல இடம் கிடைத்துள்ளது. தா பா ஒருபக்கம் சோகம் கலந்த நகைச்சுவையை அள்ளி வீசுகிறார் .தற்போது வாசனும் நல்ல ஒரு ஜோக் ஸ்டாண்ட் எடுத்துள்ளார்!.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம், பணிகள், வேட்பாளர்கள் தேர்வு படிப்படியாக தொடங்கும். வரும் 14ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் தேர்தல் குழுக் கூட்டம் நடைபெறும். என்னை பொறுத்தவரையில் என்னுடைய பொறுப்பு என்பது மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் சென்று காங்கிரஸ் வேட்பாளர்களை உறுதி செய்து, அவர்களுடைய வெற்றிக்கு பாடுபடுவேன். நான் தேர்தலில் போட்டியிடவில்லை என்றார்.

படம்: ஸ்டாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக