வெள்ளி, 14 மார்ச், 2014

தமிழகத்தில் இடதுசாரிகள் 18 தொகுதிகளில் போட்டியிட / டெபாசிட் பறிகொடுக்க முடிவு: சிபிஐ -9, சிபிஎம்-9

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 18 இடங்களில் இடதுசாரிகள் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 24ம் தேதி 40 லோக்சபா தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிமுக கூட்டணியில் இருந்து இடதுசாரிகள் வெளியேறின. திமுக அழைப்பை மறுத்த இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தன. அதன்படி, தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கட்சியும் இணைந்து 18 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளன. சிபிஐ போட்டியிடும் தொகுதிகள் இரு கட்சிகளும் தங்களுக்குள் தலா 9 தொகுதிகளாகப் பிரித்துக் கொண்டுள்ளன. அதன்படி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி, நாகை, திருப்பூர், சிவகங்கை, புதுச்சேரி, கடலூர், திருவள்ளூர், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய 9 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. சிபிஎம் போட்டியிடும் தொகுதிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோவை, மதுரை, வடசென்னை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், தஞ்சை, விழுப்புரம், கன்னியாகுமரி தொகுதிகளில் போட்டியிடுகின்றன. அதேபோல். போட்டியிடாத 22 தொகுதிகளில் யாருக்கும் ஆதரவு தெரிவிக்கப் போவதில்லை என அக்கட்சிகள் தெரிவித்துள்ளன. மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் வெளியிடப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பட்டியல் 17ம் தேதி அன்று வெளியிடப்படுகிறது. இத்தகவலை அவ்விரு கட்சிகளின் மாநில செயலாளர்களான தா.பாண்டியன் மற்றும் ஜி.ராமகிருஷ்ணன் இணைந்து அறிவித்துள்ளனர்.
tamil.oneindia.in 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக