வியாழன், 13 பிப்ரவரி, 2014

தெலங்கானா: மக்களவையில் மிளகுப்பொடி Spray! பாதிக்கப்பட்ட எம்.பி.க்கள் சிலர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச்


மக்களவை உறுப்பினர் ராஜகோபால்
தெலங்கானா மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திரா எம்.பி. தன்வசம் இருந்த பெப்பர் ஸ்ப்ரே-வை தெளித்து நூதனப் போராட்டம் நடத்தியதால் மக்களவை போர்க்களமானது.
மக்களவையில் இன்று தெலங்கானா மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், மக்களவையில் விஜயவாடா எம்.பி. ராஜகோபால் தான் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்ப்ரேவை தெளித்து நூதனப் போராட்டம் நடத்தினார்.
இதையடுத்து, மக்களவையில் உறுப்பினர்கள் பலருக்கும் தொடர்ந்து இருமல் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாகினர்.
இதனிடையே, தெலங்கானா ஆதரவு மற்றும் எதிர்ப்பு எம்.பி.க்களுக்கு இடையே மக்களவையில் கடும் மோதலும் வாக்குவாதமும் ஏற்பட்டது. இதனால், அவையே போர்க்களமாகக் காட்சியளித்தது.

தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் மிளகுப்பொடி ஸ்ப்ரே தெளிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்ட எம்.பி.க்கள் சிலர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மிளகுப் பொடி ஸ்ப்ரேவின் தாக்கம், மக்களவைக்கு வெளியேவும் இருந்தது. இதனால், பத்திரிகையாளர்களும் தொடர் இருமலால் பாதிக்கப்பட்டனர்.
மக்களவையில் இன்று நடந்த சம்பவம் தொடர்பாக, சபாநாயகர் அளிக்கும் உத்தரவின்படி, மத்திய அரசும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று மத்திய அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.
மக்களவையின் இன்று நிகழ்ந்தது மிகுந்த அவமானத்துக்குரியது என்ற சபாநாயகர் மீரா குமார், எந்த வகையான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து தலைவர்களுடன் அலோசிக்கப்படும் என்று தெரிவித்தா tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக