வியாழன், 13 பிப்ரவரி, 2014

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி படுமோசமாக சரிந்தது !: 2010-11ல் 13.12%; 2012-13ல் 4.14%!! நாட்டிலேயே மிகக் குறைவான வளர்ச்சி கொண்ட மாநிலம

சென்னை: 2012-13ஆம் ஆண்டில் நாட்டிலேயே தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிதான் மிகக் குறைவாக 4.14% ஆக இருந்தது. இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான 4.9% ஐ விட குறைவாகும். தமிழக சட்டசபையில் இன்று நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 2014-15ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது தமிழகத்தின் பொருளாதார நிலைமை குறித்து கூறுகையில், சரிநிகர் வளர்ச்சியை எட்ட மாநில அரசு கடுமையாக முயன்று வரும் அதே வேளையில் வளர்ச்சியைத் தூண்டவும், நலிவுற்று வரும் பேரியல் பொருளாதாரச் சூழ்நிலைகளை மேம்படுத்தவும், மத்திய அரசு தவறியதன் காரணமாக, பொருளாதார வளர்ச்சியும், முதலீடுகளும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

தொடரும் பொருளாதார மந்த நிலையால் மாநில வரி வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கியத் துறைகளில் அரசின் முதலீடுகளைக் குறைக்காமல் தமிழ்நாடு நிதி பொறுப்புடைமைச் சட்ட குறியீடுகளைக் கடை பிடிப்பதும் மிகவும் கடினமான சவாலாக அமைந்துள்ளது. 2013-2014 ஆம் ஆண்டு மாநிலப் பொருளாதார வளர்ச்சி ஐந்து சதவீதத்திற்கு கூடுதலாக இருக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் இந்த நிலை மாறுவதற்கான சில அறிகுறிகள் தென்பட்டுள்ளன என்றார்.
ஓ. பன்னீர்செல்வம் சொல்வது போல தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பின் தங்கிப்போய்தான் உள்ளது. திட்டக் கமிஷன் தெரிவிக்கும் புள்ளிவிவரங்களைப் பாருங்கள்.
திட்டக் கமிஷனின் புள்ளி விவரப்படி தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியானது 2009-10ஆம் ஆண்டில் 13.12% ஆக இருந்திருக்கிறது. அதற்கு முந்தைய ஆண்டில் இது 10.8% ஆக இருந்திருக்கிறது.
இது அடுத்த ஆண்டில் அப்படி குறைந்துபோய் ஒற்றை இலக்கத்தை தொட்டுவிட்டது. 2010-11ஆம் ஆண்டில் வெறும் 7.42% ஆகத்தான் இருந்தது மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி
அதற்கு அடுத்த ஆண்டு இன்னும் மிக மோசமாகிப் போய் வெறும் 4.14% சதவீத பொருளாதார வளர்ச்சியைத்தான் கண்டது தமிழகம். அதுவும் நாட்டிலேயே மிகக் குறைவான பொருளாதார வளர்ச்சி கொண்ட மாநிலமாக சுருங்கிப் போனது.
அதுவும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 4.9%விடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கு முதன்மையாக காரணம் மின்வெட்டு நிலைமையை மாநில அரசு சரியாக கையாளாமல் விட்டதுதான் என்கின்றனர் திட்டக் குழு அதிகாரிகள்
இன்றைய பட்ஜெட் தாக்கலின் போது நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியதைப் போல, 2013-14ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சியை எட்டுமா தமிழகம் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
tamil.oneindia.in/ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக