ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

Delhi சட்டசபையை முடக்க்கம், ஜனாதிபதி ஆட்சிக்கு ஆலோசனை

புதுடில்லி : டில்லி சட்டசபையை கலைக்கும்படி, 'ஆம் ஆத்மி' தலைவர், கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கையை, அம்மாநில கவர்னர், நஜீப் ஜங் நிராகரித்து விட்டார். சட்டசபையை முடக்கி வைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, அவர், பரிந்துரைத்தார். இதற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. டில்லியில், சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 70 தொகுதி களை கொண்ட சட்டசபையில், 28 தொகுதிகளில் வெற்றி பெற்ற, ஆம் ஆத்மி கட்சி, காங்., - எம்.எல்.ஏ.,க்கள் எட்டு பேர் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. முதல்வராக, கெஜ்ரிவால் பொறுப்பேற்றார். அவரின் சகாக்கள் ஆறு பேர், அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அதிருப்தி: ஆனால், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில்மோதல் போக்கை, ஆம் ஆத்மி கட்சியினரும், அரவிந்த் கெஜ்ரிவாலும், கடைபிடித்தனர்.
எதுக்கு இந்த விளம்பரம்? கட்சிக்கு பெரும்பான்மை இல்லன்னு தெரியும்...காங்கிரஸ் ஆதரவோட தான் ஆட்சின்னு தெரியும்....மக்களுக்கு நல்லது செய்யிற கட்சின்னா முதல்ல மக்கள் கஷ்டங்கள் மீதான மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து அவர்களின் பிரச்சினையை தீர்க்க ஆரம்பிச்சு இருக்கணும்...அதுக்கு பேருதான் மக்கள் கட்சி...அரசியல் ஆதாயங்களுக்காக அம்பானிகளை எதிர்க்கிறதும், ஆதரவு கொடுத்த கட்சியின் காலை வாரி விட்டுகிட்டு இருக்கறதும் தான் அரசாங்கம் செய்யிற லட்சணமா? தான் பிரபலம் ஆகிறதுக்காக ஜன் லோக்பால் (ஏற்கனவே மத்திய அரசு லோக்பால் சட்டம் கொண்டு வந்து இருக்கு) சட்டம் கொண்டு வருவதற்கும் அம்பானி டாடாவை எதிர்ப்பதற்கு மட்டுமே தனது முழு நேரத்தையும் செலவழித்தால் எப்படி மக்கள் இவரை ஏற்று கொள்வார்கள்?... 


பொது இடங்களில் தர்ணா போராட்டம் நடத்துவது, போதை மருந்து கடத்தலை தடுப்பதாகக் கூறி, வெளிநாடுகளைச் சேர்ந்த பெண்களிடம், நள்ளிரவுகளில், அத்துமீறி நடப்பது, மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல், ஊழலுக்கு எதிரான, ஜன லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதாக அறிவித்தது, போன்ற விஷயங்களில், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் கடும் அதிருப்தியை, அவர்கள் சம்பாதித்தனர். ஜன லோக்பால் மசோதா குறித்து, மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், சட்ட நிபுணர்களிடமும், கருத்து கேட்ட, டில்லி கவர்னர், நஜீப் ஜங்கை, கடுமையாக விமர்சித்தனர்.

இயற்கை எரிவாயு விற்பனையில் முறைகேடு நடந்ததாகக் கூறி, மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி, ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்ய, டில்லி போலீசாருக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டதும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று முன்தினம், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமலேயே, ஜன லோக்பால் மசோதாவை, டில்லி சட்டசபையில், அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்ய முயற்சித்தார். இது, அவரின் ஆட்சிக்கு உலை வைத்து விட்டது. எதிர்ப்பு: கெஜ்ரிவாலின் இந்த நடவடிக்கைக்கு, பா.ஜ., - காங்., ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, 'மசோதாவை தாக்கல் செய்யலாமா' என்பது குறித்து, ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.மசோதாவுக்கு எதிராக, 42 பேரும், ஆதரவாக, 27 பேரும் ஓட்டளித்தனர். இதனால், ஜன லோக்பால் மசோதாவை, கெஜ்ரிவால் தாக்கல் செய்ய முடியவில்லை.ஆத்திரம் அடைந்த கெஜ்ரிவால், 'நாங்கள் பெரிதும் விரும்பிய ஜன லோக்பால் மசோதாவை, தாக்கல் செய்ய முடியாமல், பா.ஜ.,வும், காங்., கட்சியும், சதி செய்து விட்டன' என கூறி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்; அவரின் அமைச்சர்களும், ராஜினாமா செய்தனர். இதைஅடுத்து, ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்யும் ஆசையுடன் இருந்த கெஜ்ரிவால் அரசின் ஆட்சி காலம், 49 நாளில், அல்பாயுசுடன் முடிந்து விட்டது.

இந்த நிலையில், டில்லியில், அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு நேற்று ஏற்பட்டது. ராஜினாமாவை சமர்ப்பிக்கும் முன், அமைச்சரவையை கூட்டிய கெஜ்ரிவால், சட்டசபையை கலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, கவர்னருக்கு, பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை, கவர்னர் நேற்று நிராகரித்து விட்டார். இதையடுத்து, சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்த கவர்னர், மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்புவதற்கான அறிக்கையை தயாரித்தார். அதில், சட்டசபையை முடக்கி வைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, ஜனாதிபதிக்கு, அவர் பரிந்துரைத்தார்.

ஆலோசனை:கவர்னர் அனுப்பிய அறிக்கை தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில், அவரின் வீட்டில், நேற்று இரவு நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.இதில், டில்லியில், சட்டசபையை முடக்கி வைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் கவர்னர் பரிந்துரைக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டது.சட்டசபையை கலைக்காமல், தற்காலிகமாக முடக்கி வைத்து உள்ளதால், இன்னும் சில மாதங்களில், பா.ஜ., அல்லது காங்., ஆகிய கட்சிகள், மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

 டில்லி மாநில பா.ஜ., மூத்த தலைவர் ஹர்ஷவர்த்தனும், 'பா.ஜ., ஆட்சி அமைக்க தயார்' என, அறிவித்துள்ளார். இதனால், தலைநகர் டில்லியில் ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்பு, இன்னும் சில மாதங்களுக்கு தொடரும் என, தெரிகிறது. 'கெஜ்ரிவால், முதல்வராக பதவியேற்ற போது எடுத்த உறுதி மொழியை பின்பற்ற தவறிவிட்டார். முறையான நடைமுறைகளை கடைபிடிக்காமல், ஜன லோக்பால் மசோதாவை, அவர் தாக்கல் செய்தார். அதனால் தான், காங்., - பா.ஜ., ஆகிய கட்சிகள், அந்த மசோதாவை எதிர்த்தன. சுஷில் குமார் ஷிண்டே, மத்திய உள்துறை அமைச்சர் - காங்., தினமலர்.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக