ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

இலவச பொருட்களை வழங்கும் பணி தீவிரம்: மார்ச் 15ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஓட்டுகளை அள்ளுவதற்காக தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் முன், மார்ச் 15ம் தேதிக்குள், இலவச மிக்சி, கிரைண்டர், பேன் உள்ளிட்ட பொருட்களை வழங்கி முடிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி இம்மாத இறுதியிலோ, அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்திலோ அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விடும். அதன் பின் அரசின் இலவச திட்டங்களை வழங்க முடியாது.
இலவச பொருட்கள் :கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியில் பெண்களை கவரும் வகையில், மிக்சி, கிரைண்டர், பேன், மலைப்பிரதேசங்களில் மின் அடுப்பு ஆகியன வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன் படி ஆட்சி மாற்றத்துக்கு பின், மாவட்ட வாரியாக இலவச பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கோடை காலத்துல கரண்டு இருக்காது இதுல மின்சாரத்தை அதிக அளவில் உறிஞ்சும் இலவச பொருட்கள் எல்லா மாவட்டங்களில் விநியோகிக்க பட போகிறது....செத்தீங்கயா....அதே மாதிரி மறக்காம எல்லாரும் அம்மாவுக்கு லோக்சபா தேர்தல்ல ஓட்டு போட்டு இன்னும் ஒரு பத்து வருடத்திற்கு கரண்டு கட்டு இருக்கறமாதிரி எல்லாரும் பாத்துகங்க.....உங்களுக்கு தேவை இலவச பொருளும் ரூபாயும் தானே
கடந்த, 2012ம் நிதி ஆண்டுக்கான பொருட்கள் வழங்கி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், 2013ம் நிதியாண்டுக்கான பொருட்கள் வழங்கும்பணி உள்ளூர் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் வருகைக்காக காத்திருந்தது; பல இடங்களில் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த மாதம் சென்னையில் நடந்த, அ.தி.மு.க., பொதுக்குழுவில், லோக்சபா தேர்தலுக்கு முன்பாக, நடப்பாண்டின் ஒதுக்கீட்டில் உள்ள இலவச பொருட்களை வழங்கி முடித்து விட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி மாவட்டம் தோறும் அரசு அதிகாரிகளுக்கு, இலவச பொருட்களை விரைந்து வழங்கி முடிக்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதே போல், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இலவச பொருட்களை வழங்க தாமதம் செய்யாமல், அதற்கான விழாக்களை தள்ளிப்போடுவதை தவிர்த்து, விரைந்து முடிக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள, அரசின் இலவச பொருட்களான மிக்சி, கிரைண்டர், பேன், மலைப்பிரதேசங்களில் மின் அடுப்பு ஆகியவற்றை வழங்குவதற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு, வழங்கும் பணி துவங்கி உள்ளது.தேர்தலுக்கு முன்பாகவே, மார்ச்,15ம் தேதிக்குள், இருப்பில் உள்ளவற்றை வழங்கி முடிக்கவும், அதன் பின்னர் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கும் பொருட்களை உடனுக்குடன் வழங்கவும் திட்டமிடப்பட்டு  dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக