திங்கள், 24 பிப்ரவரி, 2014

தமிழக அரசு தலைமை செயலகம் முன்பு வாலிபர் தீக்குளிப்பு


சென்னையில் தலைமைச் செயலகத்தில் (செயின்ட் ஜார்ஜ் கோட்டை) வாயில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் இன்று மதியம் 13.40 மணி அளவில் சுமார் 35 வயதுதுடைய ஒருவர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
எரியும் தீயுடன் பேருந்து நிறுத்தத்தை நோக்கி ஓடினார். இதை பார்த்த அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த வாலிபரை கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தீக்குளித்த வாலிபர் யார்? எதற்காக தீக்குளித்தார் என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக