புதன், 26 பிப்ரவரி, 2014

ஃபத்வா' உத்தரவை யார் மீதும் திணிக்க முடியாது

முஸ்லிம் மதத் தலைவர்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை (ஃபத்வா) யார் மீதும் திணிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. "முஸ்லிம் சமுதாயத்தினரின் ஷரியத் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் "ஃபத்வா' உத்தரவுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என அறிவிக்க வேண்டும்' என்று விஸ்வ லோசன் மாதம் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேலும் கூறியதாவது: "தாருல் குவாஜா' மற்றும் "தாருல் இஃப்தா' போன்ற மத அமைப்புகளின் செயல்பாடுகளில் நீதிமன்றம் தலையிடாது. எனினும் அவர்கள் பிறப்பிக்கும் "ஃபத்வா' உத்தரவுகளை தனிநபர்கள் ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும் அவரவர் விருப்பமாகும். அதை யார் மீதும் திணிக்க முடியாது.All India Personal Law Board submitted fatwa is just an opinion of Mufti and he has no power and authority to implement
இதனால் தங்கள் உரிமைகள் பாதிக்கப்படுவதாக கருதினால் மாநில அரசுகள் அவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உதாரணமாக, தசரா பண்டிகையை குறிப்பிட்ட தேதியில் கொண்டாட வேண்டும் என்று பூசாரி கூறினால் தவறில்லை. அதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தினால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடும். முஸ்லிம் மதத் தலைவர்கள் பிறப்பிக்கும் "ஃபத்வா' உத்தரவுகள் மற்றும் ஹிந்து பண்டிட்டுகளின் கணிப்புகள் போன்றவை சட்டத்துக்கு எதிரானவையாக கருதக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக