திங்கள், 10 பிப்ரவரி, 2014

அழகிரி ஆதரவு எம்.பிக்களுக்கு திமுக நோட்டீஸ் அனுப்புகிறது!

திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட அக்கட்சியின் முன்னாள் தென் மண்டல அமைப்பு செயலர் மு.க. அழகிரிக்கு ஆதரவு தெரிவித்து 3 எம்.பிக்களுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்ப திமுக தலைமை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. திமுகவில் கலகக் குரல் எழுப்பியதற்காக மு.க .அழகிரி, கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 30ந் தேதி அவரது பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்ந்தனர் ஆதரவாளர்கள். மு.க. அழகிரி ஆதரவு எம்.பிக்களுக்கு திமுக நோட்டீஸ் அனுப்புகிறது! அப்போது திமுக எம்.பிக்கள் நெப்போலியன், ராமலிங்கம் மற்றும் ரித்தீஷ் ஆகியோர் மு.க.அழகிரிக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர். அத்துடன் அழகிரியையே ஆதரிப்போம் என்று கூறியிருந்தனர். இவர்களில் ரித்தீஷ் எம்.பி. தமது ஆதரவாளர்களை பெருமளவில் மதுரையில் குவித்து அழகிரிக்கு 'திராணி' இருக்கிறது என்பதை வெளிப்படுத்திக் காட்டினார். அத்துடன் அண்மையில் பேட்டி ஒன்றிலும். அழகிரியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்ததற்காக வரப்போகும் பிரச்னைகளை பற்றி நான் கவலைப்படவில்லை என்றும் ரித்திஷ் கூறியிருந்தார்.
இதனால் திமுக தலைமை மிகவும் அதிருப்தி அடைந்திருக்கிறது. ஆகையால் அழகிரியை ஆதரிக்கு 3 எம்.பிக்களுக்கும் அல்லது ரித்தீஷ் எம்.பிக்கு மட்டும் முதலில் நோட்டீஸ் அனுப்புவது என திமுக தலைமை முடிவு செய்திருக்கிறது. இருப்பினும் திருச்சி மாநாடு நடைபெறும் நிலையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமா? என்றும் திமுக தலைமை ஆலோசித்து வருகிறது. tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக