திங்கள், 10 பிப்ரவரி, 2014

U P 48 வயது பெண் கற்பழித்து கல்லால் அடித்துக் கொலை

உத்தரபிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சுக்ராட்டல் என்ற புனித தலம் உள்ளது. இப்பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வந்த 48 வயது மதிக்கத்தக்க பெண் நேற்றிரவு தனது வீட்டின் உள் அறையில் வழக்கம் போல் தூங்கி கொண்டிருந்தார்.
அவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த போது அடையாளம் தெரியாத சிலர் உள்ளே நுழைந்தனர். அந்த பெண்ணின் வாயை துணியால் பொத்திய அவர்கள், பலவந்தமாக கற்பழித்தனர். நடந்த விஷயம் வெளியே தெரிந்தால் போலீசில் சிக்கிக் கொள்வோம் என பயத்தில் அந்த பெண்ணை கல்லால் அடித்து கொன்றுவிட்டு, தப்பியோடினர்.
இன்று காலை அப்பகுதியில் ஒரு பெண் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்ய முசாபர் நகர் மாவட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொலை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக