சனி, 15 பிப்ரவரி, 2014

அழகிரி:பதவி என்பது கால் தூசிக்கு சமம் ! அழகிரி பக்குவமாக செயல் பட தொடக்கி விட்டார்.

பதவி என்பது கால் தூசிக்கு சமம்; மூன்று மாதங்கள், 'வெயிட்' பண்ணுங்க, நல்ல முடிவு வரும்,'' என, மதுரையில் நடந்த, ஆதரவாளர் இல்ல திருமண நிகழ்ச்சியில், தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி தெரிவித்தார். அழகிரி பேசியதாவது:நான் மதுரைக்கு வந்த போது, முதலில் அறிமுகமாகிய நபர், தற்போது பதவி இழந்துள்ள, அவைத் தலைவர் இசக்கிமுத்து தான். அரசியலில் அடியெடுத்து வைக்க, அவர் காரணமாக இருந்தார். அன்று எந்த பதவியும் இல்லாமல், சாதாரண தொண்டனாக இருந்தபோதும், என்னை சுற்றி தீவிர ஆதரவாளர்கள் இருந்தனர். பலர் பதவிகள் பெற்றனர். பல இன்னல்கள்: அவர்கள், தற்போது பதவிகளை இழந்து, பல இன்னல்கள், சோதனைகளை சந்தித்த பின்னும், என்னுடன் உள்ளனர். 2000ம் ஆண்டில், எனக்கு ஒரு சோதனை (கட்சியில் இருந்த நீக்கப்பட்டது) ஏற்பட்டது. அதற்கு பின், 2014ல் மீண்டும் சோதனை ஏற்பட்டுள்ளது. எத்தனை சோதனைகள் வந்தாலும், நான் தாங்கிக் கொள்ளலாம். ஆனால், ஒரு பழிச் சொல்லை என் இதயம் தாங்காது. ஆ ..அப்படி போடு அஞ்சா நெஞ்சமே ?
இந்த நிகழ்ச்சியில், பலர் பேசும்போது, தி.மு.க.,வின் அடுத்த தலைவர், முதல்வர், ஏன், பிரதமர் என்று கூட பேசினர். எனக்கு பதவிகள் மீது எப்போதும் ஆசை இல்லை. பதவிகளை உங்களுக்கு கொடுத்து, அழகு பார்க்க நினைப்பவன் நான். பதவி என்பது என் கால் தூசிக்கு சமம். தென் மண்டல அமைப்புச் செயலர் பதவி கூட, கருணாநிதி தான் வற்புறுத்திக் கொடுத்தார். அதன்பின், எம்.பி., ஆனேன். உங்களை பார்க்கிறேன்; உங்களோடு இருக்கிறேன் என்பதே எனக்கு போதும். நமக்கு நல்ல முடிவு: கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், நான் ஏதோ வியூகங்கள் வகுத்து வருவதாக பலர் பேசினர். இன்னும், மூன்று மாதங்கள், 'வெயிட்' பண்ணுங்க. அதன் பின், நமக்கு நல்ல முடிவு காத்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை நகர் தி.மு.க.,வில் அழகிரி ஆதரவு நிர்வாகிகள் கூண்டோடு நீக்கப்பட்டு, முன்னாள் நகர் செயலர் தளபதி தலைமையில் புதிதாக, பொறுப்புக் குழுவை கட்சி நியமித்தது. இதன் உறுப்பினர், பாக்கியநாதன், நேற்று, அழகிரி பங்கேற்ற விழாவில் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில்,
''என் அரசியல் ஆசான் அழகிரி தான். இளைஞர் பட்டாளத்தின் அடுத்த தளபதி தயாநிதி அழகிரி. வைகோ பிரிந்த போது, அழகிரி, ஸ்டாலின் இணைந்து செயல்பட்டு, கட்சியை காப்பாற்றினர். 50 ஆண்டுகள், கருணாநிதி, கட்சியை காப்பாற்றினார். ஈ.வெ.ரா., போல் அழகிரி; அண்ணாத்துரை போல் ஸ்டாலின். இருவரும் இணைந்தால் தான் கட்சியை இனிமேல் காப்பாற்ற முடியும்,'' என்றார்.
dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக