திங்கள், 3 பிப்ரவரி, 2014

போதையில் தூங்கிய மணமகன்; வேறொரு வாலிபரை திருமணம் செய்த மணமகள் !

சேலம் மாவட்டம், மேட்டூர் நகரிலுள்ள  கட்டபொம்மன் நகரை சேர்ந்தவர்  மோகன். இவர் மேட்டூர் மின்சார வாரியத்தில் பணியாற்றிவருகிறார். இவரது மகள் ரேவதி.வயது-25, இவர் எம்.ஏ., பி.எட் படித்துள்ளார். ரேவதிக்கும் அதே பகுதியை சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் விஜயரத்னம், வயது-27, என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். மேட்டூர், ஒர்க்ஷாப் கார்னர் அருகிலுள்ள ஒரு மண்டபத்தில், நேற்று காலை விஜய்ரத்தினத்துக்கும், ரேவதிக் கும் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. மணமகன், மணமகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அனைவரும் திருமணத்திற்கு தயாராக வந்து திருமணமண்டபத்தில் தங்கியிருந்தனர்.
திருமணத்துக்கு முதல்நாள் இரவு, விஜய்ரத்னம் நண்பர்களுடன் திருமண விழாவை கொண்டாடியபோது மது அருந்தியுள்ளார். போதை தலைக்கேரிய  நிலையில், திருமண மண்டபத்திற்கு வந்தவர், அங்கிருந்த மோகன் குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார்.



பின்னர் உறவினர்கள் சமாதானம் செய்து அவரது வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துள்ளனர். போதை அதிகமாகப்போனதால், படுத்து தூங்கிய மணமகன் விஜய்ரத்னத்தால் காலையில் குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து குளித்துவிட்டு  திருமணத்துக்கும் வரமுடியவில்லை.
தாலிகட்டும் நேரத்துக்குள் மணமகன் வராததால் திருமணம் நின்று போனது, இதுகுறித்து, மணமகளின் தந்தை மோகன் மேட்டூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார்.


இந்நிலையில், திருமண மண்டபத்தில் கூடியிருந்த மோகனின் உறவினர்கள் தங்களின் உறவினர்களில் யாராவது ஒரு நல்ல பையனுக்கு ரேவதியை திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர். அதற்கு ரேவதியும் சம்மதம் தெரிவித்துள்ளார்.


உடனடியாக திருமண மண்டபத்தில் இருந்தவர்களில் மாப்பிள்ளை தேடியதில், ஓமலூர், கருப்பம்பட்டியை சேர்ந்த சுகுமாரன் என்பவரை ரேவதியை மணக்க முன்வந்தார். உடனடியாக அதே மண்டபத்தில், அதே முகூர்த்தத்தில் சுகுமாரனுக்கும், ரேவதிக்கும் திருமணம் நடந்து முடிந்த.nakkheeran.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக