திங்கள், 3 பிப்ரவரி, 2014

திருச்சியில் போட்டியிட திமுக.வினரிடையே கடும் போட்டி: 25 லட்சம் நிதி கொடுத்த ரகுபதி!


 1980-ல் திருச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக, அடுத்த தேர்தலில் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு, இந்தத் தொகுதியில் திமுக நேரடியாக களமிறங்கவே இல்லை. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சியில் மீண்டும் திமுக போட்டியிடும் சூழல் உருவாகி இருக்கிறது.
இந்தமுறை காங்கிரஸுடன் திமுக கூட்டணி இல்லை என்ற செய்தி பரவலாக பேசப்படுவதால் திருச்சி தொகுதியில் போட்டியிட திமுக-வினர் போட்டிபோட்டுக் கொண்டு விருப்ப மனுக்களை குவித்தனர்.
1984-ல் இங்கு போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் செல்வராஜ் திருச்சி, பெரம்பலூர் இரண்டு தொகுதிகளுக்கும் மனு கொடுத் திருக்கிறார். இவருக்கும் திருச்சி மாவட்டச் செயலாளர் நேருவுக்கும் அவ்வளவாய் ஒத்துப் போகாது என்றாலும் தலைமையின் கரிசனத் தில் தனக்கு திருச்சியில் வாய்ப்பு கிடைக்கலாம் என நம்புகிறார் செல்வராஜ்.
தொகுதியில் கணிசமாக நிறைந் திருக்கும் முத்தரையர் சமூகத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரைப் புறக்கணித்துவிட்டு தேர்தலை எதிர்கொள் வதும் சிரமம் என்பதால், ரங்கம் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்துநின்ற மாவட்ட இளைஞ ரணி அமைப் பாளர் ஆனந்தையும் விருப்பமனு கொடுக்க வைத்திருக்கிறது நேரு முகாம்.

நேரு தயவிருந்தால் மட்டுமே சீட் கிடைக்கும் என்பதால் இப்போது, திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட திமுக பிரபலங்கள் அவரை வட்டமடித்துக் கொண்டிருக்கின்றன. திருச் சிக்காக மனு கொடுத்திருக்கும் முன்னாள் அமைச்சர் ரகுபதி, திமுக மாநாட்டுக்காக நேருவிடம் 25 லட்சம் நிதி கொடுத்து போட்டி யில் முந்திக்கொண்டதாகச் சொல் கிறார்கள். ஆனாலும், ரகுபதி
மீது அழகிரி விசுவாசி என்ற முத்திரை இன்னும் அழியாமல் இருப்பதால் அவருக்கு சீட் கிடைக்குமா என்று கேள்வி எழுப்பும் உடன் பிறப்புகள், “தலைமை உத்தரவிட்டால் நேருவே களமிறங்கினாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை’’ என்கிறார்கள்.
இவர்கள் இல்லாமல், புதுக் கோட்டை மாவட்டச் செயலாளர் பெரியண்ணன் அரசு, திருச்சி மாநகர செயலாளர் அன்பழகன், திருவெறும்பூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சேகரன், அமைச் சராக இருந்தபோது நேருவுக்கு பி.எஸ்.ஓ-வாக இருந்த ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. ராஜசேகரன், முன்னாள் அரசு வழக்கறிஞர் பாஸ்கரன், தொழிலதிபர் நவல்பட்டு விஜி உள்ளிட்ட பலரும் கட்சியில் விருப்ப மனு அளித்துள்ளனர்.
இவர்களில் சேகரன் ஸ்டாலின் மூலமாகவும் ராஜசேகரன் முன்னாள் உளவுத்துறை அதிகாரியான ஜாபர் சேட் மூலமாகவும் வாய்ப்பு பெற முயற்சிப்பதாகச் சொல்கிறார்கள்.  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக