வியாழன், 27 பிப்ரவரி, 2014

சத்தியமூர்த்தி பவன்: தமிழ் அமைப்பு இளைஞர்கள் - காங்கிரசார் கடும் மோதல்


சத்தியமூர்த்தி பவன்ல சாதாரணமாவே சட்டய கிழிச்சுபாங்க....இதில சட்டய கிழிக்கிற ஸ்பெசலிஸ்ட் நாம் தமிழர் இயக்கத்தினர் புகுந்துட்டாங்கலா அவ்வளவுதான்.. ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும், தமிழக காங்கிரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை, சத்தியமூர்த்தி பவன் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்த வந்த நாம் தமிழர் கட்சியினருக்கும், தமிழர் முன்னேற்ற படையினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், மூன்று தொண்டர்கள், இரண்டு போலீசார் காயம் அடைந்தனர். இதனால், போக்குவரத்து சில மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.தமிழ் இளைஞர்கள் என்ற பெயரில் ஒரு குண்டர் படையையே ஜெயலலிதா வளர்ப்பது அவருக்குத்தான் இழப்பாக அமையும். சட்டரீதியான நடைமுறைகள் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீரழிக்கவே இந்த போராட்டங்கள். இலங்கையில் தமிழர்களிடம் இல்லாத வெறி ஜெயாவுக்கு ஒட்டு வாங்க வேண்டி இங்கு தான் தலைவிரித்தாடுகிறது.






காங்கிரஸ் கடும் எதிர்ப்பு:
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகள், ஏழு பேரை விடுதலை செய்ய, தமிழக அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு, தமிழக காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து, மாநில அளவில், ஆளுங்கட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், காங்கிரசாருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படும், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த, 50 பேர் சத்தியமூர்த்தி பவன் முன் ஆர்ப்பாட்டம் நடந்த, நேற்று காலை, 10:00 மணிக்கு திரண்டு வந்தனர்.






தொண்டர்கள் குவிந்தனர்:
இந்த தகவல், காங்., மாவட்ட தலைவர்கள் கராத்தே தியாகராஜன், ரங்கபாஷ்யம், நெடுஞ்செழியனுக்கு தெரியவந்ததும், அவர்கள், தங்கள் மாவட்டத்தை சேர்ந்த கட்சி தொண்டர்களை, சத்தியமூர்த்தி பவனுக்கு உடனடியாக வரும்படி அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, சத்தியமூர்த்தி பவனில் தொண்டர்கள் குவிந்தனர். சென்னை, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், எண்ணூர் துறைமுகத்திற்கு, காமராஜர் பெயர் சூட்டு விழாவில் பங்கேற்றிருந்த, தமிழக காங்கிரஸ் தலைவர், ஞானதேசிகனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் உடனடியாக, போலீஸ் கமிஷனரிடம் புகார் தெரிவித்தார். பின், சத்தியமூர்த்தி பவனின் பிரதான கதவுகளை பூட்டி விடும்படியும், எந்த தொண்டர்களும் வெளியே செல்ல வேண்டாம் என, ஞானதேசிகன் உத்தரவிட்டுள்ளார்.


இந்நிலையில், தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி தலைமையில், தமிழ் அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள், திடீரென சத்தியமூர்த்தி பவனுக்கு திரண்டு வந்தனர். சத்தியமூர்த்தி பவன் வெளியே வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மீது, சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், ஆவேசம் அடைந்த காங்கிரஸ் தொண்டர்கள், பிரதான கதவின் பூட்டை உடைத்து விட்டு வெளியே வந்தனர்.





ஹெல்மெட் அணிந்து:
கராத்தே தியாகராஜன், தன் தலையில், ஹெல்மெட் அணிந்து கொண்டு, கையில் உருட்டுக்கட்டையை எடுத்துக் கொண்டு, எதிர்தாக்குதல் நடத்த ஓடினார். அவருடன் அசோக்குமார், எஸ்.எம்.குமார், செரீப், நிசார், அருண்பிரசாத், திரவியம், காமராஜ் உட்பட ஏராளமான காங்கிரசாரும் எதிர்தாக்குதல் நடத்த ஓடினர். சத்தியமூர்த்தி பவனில் காம்பவுண்டு சுவர் கட்ட, செங்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. முழு செங்கலை, அரை செங்கலாக உடைத்து, தமிழ் அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் மீது, காங்கிரசார் தூக்கி வீசினர். இருதரப்பினரும் கல் வீசி தாக்குதல் நடத்தியதில், காங்கிரசை சேர்ந்த நாச்சிக்குளம் சரவணன், சத்யா, குமார் ஆகியோரும், போலீசார் இருவரும் காயம் அடைந்தனர். இரு தரப்பினரையும், போலீசார் விரட்டியடிக்கவும், தமிழ் அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர். சில இளைஞர்கள் தங்கள் பேன்ட் பாக்கெட்டுகளில் மறைத்து கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை, சத்தியமூர்த்தி பவன் மீது வீச முயன்றதை, காங்கிரசார் முறியடித்தனர். நடுரோட்டில், காங்கிரஸ் தலைவர்களின் உருவப்பொம்மைகளை, தமிழ் அமைப்புகளை சேர்ந்த இளைஞர்கள் தீ வைத்து கொளுத்தினர். பதிலுக்கு, சீமான் உருவப்பொம்மையை காங்கிரசார் எரித்தனர். அப்போது, ஒரு சைக்கிளை தூக்கி, கொழுந்து விட்டு எரிந்த தீக்குள் வீசினர். இந்த தீ எரிப்பு சம்பவத்தினால், அப்பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.






போக்குவரத்து நிறுத்தம்:
சத்தியமூர்த்தி பவன் அமைந்துள்ள ஜெனரல் பீட்டர்ஸ் சாலையில், வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், அண்ணாசாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை பகுதிகளில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையில், ராயப்பேட்டையில், காமராஜர் பெயர் சூட்டும் விழா முடிந்ததும், சத்தியமூர்த்தி பவனுக்கு காங்கிரசார் விரைந்து வந்தனர். அங்கு சிதறிக்கிடந்த செங்கல்லையும், தீ வைக்கப்பட்ட இடத்தையும், மத்திய அமைச்சர் வாசன், ஞானதேசிகன், வசந்தகுமார் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது, 'சீமானை கைது செய்ய வேண்டும்' என, தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். பின், அங்கிருந்து, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரசார் மற்றும் போலீசாரை, வாசன், ஞானதேசிகன், ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இச்சம்பவத்தினால், அப்பகுதியில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக