வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் மீது மனைவி புகார் !

திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மீது அவரது மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
சுப்ரமணியபுரம்,ஈசன் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்தவரும்,தொலைகாட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பணிபாற்றுபவர் ஜேம்ஸ்வசந்தன்.இவரது மனைவி சுகந்தி இன்று அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கும் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கும் கடந்த 1991-ல் திருச்சியிலுள்ள கிறிஸ்துவ ஆலயத்தில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்தது. 23 வருடங்கள் ஆகிவிட்டது. எங்களுக்கு ஷில்பா என்ற மகளும், சச்சின் என்ற மகனும் உள்ளனர். ஆனால், எனது கணவன் ஜேம்ஸ் வசந்தனுக்கு அதிக பெண்களுடன் தவறான தொடர்பு இருந்ததால் எங்களுக்குள் அடிக்கடி கருத்துவேறுபாடு ஏற்பட்டு வந்தது. வி.ஜி.பி. பிரசாத் தாஸின் முன்னாள் மனைவி ஹேமலதாவுடன் தவறான தொடர்பு வைத்திருந்த அவர் தற்போது தனது மனைவி என்று வெளிப்படையாக சொல்லி வருகிறார்.
உண்மையான மனைவி நான் உயிரோடு இருக்கும்போது என்னிடம் விவாகரத்தும் வாங்காத நிலையில் வேறொரு பெண்ணை மனைவி என்று எனது கணவன் ஜேம்ஸ் வசந்தன் சொல்லிவருவது எனக்கு கடுமையான மன உளைச்சலை உண்டாக்குகிறது. இதனால் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளார். கண்கள் இரண்டால் என்ற இவரது பாடல் இவரை புகழின் உச்சிக்கு  விட்டது. இப்பாடல் ரீதிகௌல  ராகத்தில் அமைந்துள்ளது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக