புதன், 26 பிப்ரவரி, 2014

டாப்ஸி: சினி ஃபீல்டில் யாரிடமும் பழகுவதில்லை ?

சென்னை:நடிப்பதற்கு வாய்ப்பு குறைந்ததால் மீண்டும் படிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் டாப்ஸி.ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் டாப்ஸி. இந்தியிலும் ஒன்றிரண்டு படங்களில் நடித்துள்ளார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் குவியவில்லை. இதையடுத்து மீண்டும் படிக்க முடிவு செய்துள்ளார்.
ஆடுகளம் படத்தில் எனக்கு பாராட்டு கிடைத்தது. ஒரு நேரத்தில் ஒரு படம் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன். இதனால் குறிப்பிட்ட ஒரு கதாபாத்திரத்தில் முழு
கவனம் செலுத்த முடிகிறது. எனது நிறைய நண்பர்கள் சினிமா துறையை விட்டு வெளியில்தான் இருக்கிறார்கள்.
சினிமாவில் எனக்கு அதுபோல் நண்பர்கள் வட்டம் கிடையாது. நானும் பெரிதாக யாரிடமும் பழகுவது இல்லை. நடிப்பு முடிந்ததும் எனது சொந்த வேலையை பார்க்கவே ஆர்வம் காட்டுவேன். இன்ஜினியரிங் படிப்பு முடித்தபிறகு நடிக்க வந்தேன். தற்போது மீண்டும் படிப்பு மீது ஆர்வம் கொண்டிருக்கிறேன். எனது மேற்பட்ட படிப்புக்காக மீண்டும் கவனம் செலுத்த உள்ளேன்.

நான் எதையும் வெளிப்படையாக பேசுபவள். மற்றவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று எண்ணுவேன். மனதுக்குள் ஒன்றை வைத்துக்கொண்டு உதட்டளவில் வேறுமாதிரி பேசுபவர்களை பிடிக்காது. அவர்களை சந்திப்பதைகூட தவிர்த்து விடுவேன்.<.tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக