சனி, 15 பிப்ரவரி, 2014

விஜயகாந்த் நாக்கை துருத்தி, கையை நீட்டி, ''உனக்கெல்லாம், எதுக்கய்யா, நான் பதில் சொல்ல வேண்டும்; போய்யா

டில்லியில், பிரதமர் மன்மோகன் சிங்கை, தே.மு.தி.க., தலைவர், விஜயகாந்த் நேற்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு முடிந்து வெளியில் வந்த அவரை, நிருபர்கள் பேட்டி காண முயன்ற போது, அவர்களை நோக்கி, நாக்கை துருத்தி, கையை நீட்டி, ''உனக்கெல்லாம், எதுக்கய்யா, நான் பதில் சொல்ல வேண்டும்; போய்யா...'' எனக்கூறி, ஆவேசமாக, விஜய்காந்த் முன்னேற முயன்றதால், பாதியிலேயே, நிருபர்கள் சந்திப்பு முடிந்தது

 எல்.ஏ.,க்கள் அணிவகுப்பு:டில்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள, பிரதமர் இல்லத்தை விட்டு வெளியே வந்த, விஜயகாந்தை, நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். பிரதமர் இல்லத்தின் எதிர்புறம் உள்ள சாலையில் தான், இடவசதி உள்ளது என்பதால், விஜயகாந்தை, அங்கு வரும்படி, நிருபர்கள் அழைத்தனர்.காரைவிட்டு, விஜயகாந்த் இறங்கி வருவதற்கு முன், அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வந்து, வரிசையாக அணிவகுத்து நின்றனர். பின், சுதீஷ் சைகை காட்டியதும், நிருபர்கள் இருந்த இடத்திற்கு, விஜயகாந்த் வந்தார்.டில்லியில், நேற்று மழை பெய்து, மேக மூட்டமாக இருந்த நிலையிலும், கூலிங் கிளாஸ் அணிந்தபடியே, பேட்டியை விஜயகாந்த் ஆரம்பித்தார். பிரதமரின் சந்திப்பு குறித்து, பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போல், பேச ஆரம்பித்தார்.     மாயவரத்துல கூப்டாக, மன்னார்குடியில் கூப்டாக.........இப்படி பாட்டு  படிச்சே பொழப்பு போகப் போகுது.......தலைவர் இவரை ஸ்டன்ட் நடிகர் என்று சொன்னார்..அங்கே டில்லியில் உடனே நாக்கை துருத்தி நல்ல பெர்பார்மென்ஸ்......இவரை பேட்டி காண போகும் நிருபர்கள் ஹெல்மெட் போட்டு போங்கப்பா...
பின், தமிழக அரசு மற்றும் முதல்வர் ஜெயலலிதா குறித்து, சில நிமிடங்கள் தாக்கிப் பேசினார். அப்போது, அவர் கூறியதாவது:தமிழக பிரச்னைகள் குறித்து, பிரதமரிடம், எடுத்துக் கூறினேன். தண்ணீர் பிரச்னைகளை பேசிய போது, 'என்ன செய்வது... அண்டை மாநிலங்களான கேரளாவிலும், கர்நாடகாவிலும் தண்ணீர் இல்லையே' என, பிரதமர் குறிப்பிட்டார். தமிழக மீனவர்கள் பிரச்னையை, ராமேஸ்வரம் மீனவர்களும், இலங்கை மீனவர்களும் பேசித் தீர்க்கலாம் என, ஆலோசனை தெரிவித்தார்.இவ்வாறு, விஜயகாந்த் கூறினார். மீனவர்கள் பிரச்னை: உடன், நிருபர் ஒருவர், 'இவ்வளவு நாளாக, அமைதியாக இருந்து விட்டு, பிரதமரின் பதவி காலம் முடியும் நேரத்தில், டில்லிக்கு வந்து, மீனவர்கள் பிரச்னை குறித்து, முறையிடுகிறீர்களே' என, கேட்டதும், ''மீனவர்கள் பிரச்னைக்காக, நான் உண்ணாவிரதம் எல்லாம் இருந்திருக்கிறேன்,'' என, விஜயகாந்த் காட்டமாக தெரிவித்தார்.'பிரதமருடன் பேசியதால், காங்கிரசுடன் கூட்டணி அமைய, வாய்ப்புள்ளதா?' என்று மற்றொரு நிருபர் கேட்டபோது, ''கூட்டணி பற்றி, நீங்கள் எல்லாம், கவலைப்பட வேண்டாம். அதை, நாங்களே பார்த்துக் கொள்கிறோம்,'' என, முகத்தில் அடித்தார் போல, பதில் அளித்தார். இந்நிலையில், வேறு ஒரு நிருபர், 'தே.மு.தி.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் எல்லாம், தங்களை, கட்சியை விட்டு நீக்க வேண்டும் என, பகிரங்கமாக கோரி வருகின்றனரே. உங்களின், பதில் என்ன?' என்று கேட்டார்.இந்த கேள்வியை, அவர் கேட்டு முடிப்பதற்குள், ஆவேசமடைந்த விஜயகாந்த், ''உனக்கு இதே வேலையா போச்சா... போன முறை, டில்லி வந்த போதும், நீ, 'பிரஸ்மீட்'டை கெடுத்த. இப்பவும், கெடுக்கப் பார்க்கிறாயா?'' என, ஆவேசப்பட்டார். நிருபரும், தொடர்ந்து, தன் கேள்வியில், விடாப்பிடியாக இருக்க, ஒரு கட்டத்தில், நாக்கை துருத்தி, ''பட்டு பட்டுனு பேசிருவேன். போய்யா... நான் எதுக்குய்யா, உனக்கு பதில் சொல்லணும். உனக்கு, பதில் சொல்ல, முடியாதுய்யா...'' என, கையை நீட்டியபடியே, ஆவேசமாக, முன்னேற முற்பட்டார். களேபரம்: உடன் அருகில் இருந்த, எம்.எல்.ஏ.,க்களும், 'இந்த கேள்வியெல்லாம், கேட்கக் கூடாது' என, மிரட்ட ஆரம்பித்ததும், பத்திரிகையாளர்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். இரு தரப்புக்கும் இடையே, பிரச்னை உருவாக, நிலைமை பரபரப்பானது. உடன், 'போதும் போதும் பிரஸ்மீட்' என, கூறிவிட்டு, விஜயகாந்தும் மற்றவர்களும் கிளம்பினர். இந்த களேபரங்களை, படம் பிடித்த, 'தினமலர்' போட்டோ கிராபரை, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்கள் சிலர், கீழே தள்ளி விட்டனர். அதை எதிர்த்து கேட்ட போது, 'மேடம் வர்றாங்க. வழிய விடுங்க' எனக் கூறி, பிரேமலதாவுக்கு, வழி ஏற்படுத்தி கொடுத்தபடி, கிளம்பிச் சென்றனர். விஜயகாந்துடன் சென்ற இன்னும் சிலரோ, 'கேள்வி கேட்டவன, விட்டுருக்க கூடாதன்னே என்றனர். தினமலர்.கம 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக