செவ்வாய், 7 ஜனவரி, 2014

ஆம் ஆத்மி' கட்சியின் தேசிய அளவிலான கொள்கைகள் என்ன?

புதுடில்லி:டில்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றியுள்ள, அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, 'ஆம் ஆத்மி' கட்சி, தேசிய அளவில் காலூன்ற, பல முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆனால், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில், அந்தக் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது தெளிவாக்கப்
படாததால், கட்சிக்குள் கடும் குழப்பம் நிலவுகிறது. நாட்டு மக்கள் பார்வை:>கட்சி துவக்கி, ஓராண்டு ஆவதற்குள், டில்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு, ஆட்சியை கைப்பற்றியுள்ள, ஆம் ஆத்மி கட்சி மீதும், அக்கட்சியின் முக்கிய செயல் திட்டங்கள் மீதும், நாட்டு மக்கள் அனைவரின் பார்வையும் விழுந்துள்ளது.டில்லியில், மின் கட்டணம் பாதியாகக் குறைப்பு, வீட்டுக்கு வீடு, 700 லிட்டர் குடிநீர், வி.வி.ஐ.பி., கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி போன்ற, அக்கட்சியின் நட்சத்திர அம்சங்களால், ஈர்க்கப்பட்ட பல மாநிலத்தவர்களும், தங்கள் மாநிலத்தில், ஆம் ஆத்மி கட்சியைத் துவக்கினால், சேர விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அவசர கதியில் நடந்த கோலம் இப்போ மாட்டி கொண்டு தவிக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் இது அந்த நாள் ஜனதா கட்சி மாதிரி ஆகிவிடும். அன்று கோமாளிகள் பலர் ஜனதாவில் இருந்தனர் இந்த சாந்தி பூஷன் கூட இருந்தார்.பாவப்பட்ட மொராஜி மற்றும் பெர்னாண்டஸ் போன்றோரும் அதில் சிக்கினர்.
இதை அறிந்த அக்கட்சி, இன்னும், நான்கைந்து மாதங்களில் வரவுள்ள லோக்சபா தேர்தலில், பல மாநிலங்களில் போட்டியிட்டு, அதிக இடங்களில் வெற்றி பெற்று, மத்தியிலும் ஆட்சி அமைக்க முடிவு செய்தது.அதற்காக, நாடு முழுவதும், 300க்கும் மேற்பட்ட இடங்களில், கட்சி அலுவலகம் திறக்க முடிவு செய்துள்ள அக்கட்சியின், முன்னணி தலைவர்களான, பிரஷாந்த் பூஷன் போன்றோர், நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, ஆதரவு திரட்டி வருகின்றனர். ஆனால், தேசிய அளவில் முக்கிய பிரச்னைகளில், அந்தக் கட்சியின் கொள்கை என்ன என்பது குறித்து, இன்னமும் தெளிவான அறிவிப்பு இல்லாததால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.பல ஆண்டுகளாக நீடித்து வரும், காஷ்மீர் பிரச்னை குறித்து, அக்கட்சியின் கருத்து தெரியாத நிலையில், மூத்த தலைவர், பிரஷாந்த் பூஷன், 'காஷ்மீரில் ராணுவம் நீடிக்க வேண்டுமா என்பது குறித்து, கருத்து ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும்' என்று பேசி, பிரச்னையை ஏற்படுத்தியுள்ளார்.



முஸ்லிம்களின் பண்டிகை:

அது போல், அக்கட்சியின் அமைச்சர்களில் ஒருவரான, குமார் விஸ்வாஸ் என்பவர், முஸ்லிம்களின் பண்டிகை ஒன்று குறித்து, சர்ச்சைக்குரிய விதத்தில் தெரிவித்த கருத்துக்கு, ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின், முஸ்லிம், எம்.எல்.ஏ., நேற்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.'அந்த கருத்துகளை வாபஸ் பெறவில்லை எனில், அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற வேண்டி வரும்' என, மிரட்டும் அளவுக்கு பிரச்னை சென்றது.இதனால் அதிர்ச்சி அடைந்த முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால், ''பிரஷாந்த் பூஷன் தெரிவித்த கருத்துகளுக்கும், கட்சிக்கும் சம்பந்தமில்லை; அது, அவரின் சொந்த கருத்து. குமார் விஸ்வாஸ் பேசியதற்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்,'' என, கூறினார்.

குறுகிய காலத்தில், முக்கிய பொறுப்பு, நாட்டு மக்கள் அனைவரிடமும் பெருகி வரும் ஆதரவு, ஊழலுக்கு எதிரானவர்கள் என்ற, வலுவான முத்திரை போன்றவற்றால், ஆம் ஆத்மி கட்சியினருக்கு, நாடு முழுவதும் வரவேற்பு அதிகரித்து வரும் நிலையில், முக்கிய தேசிய பிரச்னைகளில், அக்கட்சியின் கொள்கை என்ன என்பது, இன்னமும் முடிவாகாததால், அக்கட்சியிலும், அக்கட்சியை நம்புபவர்கள் மத்தியிலும், குழப்பம் ஏற்பட்டுள்ளது.


'ஆம் ஆத்மி' எதிர்கொள்ளும் முக்கிய தேசிய பிரச்னைகள்:

*அக்கட்சியின் மூத்த தலைவர், பிரஷாந்த் பூஷன், தமிழகத்தின் கூடங்குளம் சென்று, அணு உலைக்கு எதிராகச் செயல்பட்டு வரும், உதயகுமாரை சந்தித்து பேசியுள்ளார். இதன் மூலம், அக்கட்சி, அணு உலைக்கு எதிரானது என்ற, கருத்து பரவி வருகிறது.இந்த விவகாரத்தில், அக்கட்சியின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டும்.*காஷ்மீர் விவகாரம், 60, 70 ஆண்டுகளாக நீடிக்கிறது. தேச பாதுகாப்பு, ஒருமைப்பாடு போன்ற விஷயங்களை உள்ளடக்கிய அந்த விவகாரத்தில், ஆம் ஆத்மியின் நிலைப்பாடு என்ன என்பது, முக்கிய கேள்வியாக உள்ளது.ஏனெனில், கருத்து ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்ற, ஐ.நா.,வின் கோரிக்கையையே, நம், மத்திய அரசு நிராகரித்துள்ள நிலையில், ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர், பிரஷாந்த் பூஷன், அந்தக் கருத்தை வலியுறுத்தியுள்ளதால், கட்சியின் நிலைப்பாடு என்ன, என்ற முக்கிய கேள்வி எழுகிறது.
*நதிகள் இணைப்பு, மாநிலங்களுக்கு இடையே, நதிநீர் பங்கீடு போன்ற, இப்போதும் எரிந்து கொண்டிருக்கும் பல பிரச்னைகள் உள்ளன.அந்த விவகாரங்களில், ஆம் ஆத்மியின் நிலைப்பாடு என்ன?
*தெலுங்கானா விவகாரத்தில், ஆம் ஆத்மி நிலை என்ன?
*ஓரினச்சேர்க்கைக்கு எதிராக, சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளில், ஆம் ஆத்மியின் நிலைப்பாடு என்ன?*வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றில், பல ஆண்டுகளாக நீடிக்கும், பிரிவினைவாத குழுக்கள், அவர்களின் கோரிக்கைகள் குறித்து, ஆம் ஆத்மியின் நிலைப்பாடு என்ன?
*அண்டை நாடான, பாகிஸ்தான் தூண்டி விடும், எல்லை தாண்டிய பயங்கரவாதம், அதனால் பாதிக்கப்பட்டுள்ள தேசம் குறித்து, ஆம் ஆத்மியின் கொள்கை என்ன?
*காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுவது குறித்து, விவாதம் நடத்த வேண்டும் என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி குறிப்பிட்டுள்ளார்.இந்த விவகாரத்தில், ஆம் ஆத்மியின் நிலைப்பாடு என்ன என்ற முக்கிய கேள்வி, மக்கள் முன் உள்ளது.
*டில்லி, மும்பையில், பீகாரிகள் மற்றும் உ.பி., மாநிலத்தவர் அதிகரிப்பு குறித்து, ராஜ் தாக்கரே போன்றவர்களுக்கு, ஆம் ஆத்மி என்ன பதில் சொல்லப் போகிறது?
*முக்கியமாக, இலங்கை தமிழர் பிரச்னையில், அக்கட்சியின் நிலைப்பாடு தெளிவாக்கப்பட வேண்டும்.
*எல்லையில் சீன ராணுவம் அடிக்கடி அத்துமீறுவதால், இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு, ஆம் ஆத்மியின் பதில் என்ன?
*மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள், பொருளாதார, சுற்றுச்சூழல் ஒப்பந்தங்கள் பற்றி, அக்கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது, அனைவரும் அறிய விரும்பும் அம்சங்களாக
உள்ளன.இது போல், ஏராளமான, எரிந்து கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு, ஆம் ஆத்மியின் பதில் என்ன என்பது தெரிய வந்த பிறகு தான், லோக்சபா தேர்தல் மற்றும் பிற மாநிலங்களில் கட்சி வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது, நடுநிலையாளர்களின் கருத்தாக அமைந்துள்ளது. ஏனெனில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளில், அக்கட்சியின் நிலைப்பாடு முழுமையாக தெரிந்தால் தான், எதிர்காலத்தில், அக்கட்சியின் நம்பகத்தன்மையும் உறுதியாகும் என்பது, அரசியல் நோக்கர்களின் விருப்பமாகவும் உள்ளது. dinamalar .com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக