ஞாயிறு, 5 ஜனவரி, 2014

நர்சிங் மாணவி இறந்தது எப்படி? உடலில் காயங்கள் உள்ளதால் அவரை கொலை செய்து எரித்திருக்கலாம்.

திருச்சி: தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த வாரணாங்குடியை சேர்ந்தவர் ராஜேந்திரன். வல்லம் மின்வாரிய அலுவலகத்தில் லைன்மேனாக வேலை செய்கிறார். இவரது மகள் கீதா (21). திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கி 3ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை கீதாவை, பலத்த தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் கல்லூரி நிர்வாகத்தினர் சேர்த்தனர். கீதா மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். மாணவி கீதா, செவிலியர் தேர்வில் தோல்வி அடைந்ததால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்றும், கீதாவுக்கும் அவரது உறவினர் துரைராஜ் என்பவருக்கும் 6 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்ததும், குடும்ப பிரச்னையில் அவர் தற்கொலை செய்து கொண் டார் எனவும் இரு வேறு தகவல்கள் வெளியாயின.

உட்.
இந்நிலையில் மாணவியின் சாவில் சந்தேகம் உள்ளது.உடலில் காயங்கள் உள்ளதால் அவரை கொலை செய்து எரித்திருக்கலாம. எனவே, கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதுவரை பிரேத பரிசோதனை நடத்த விடமாட்டோம் என்று மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆர்டிஓ பஷீர் தனியாக விசாரணை நடத்தினார். மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆர்டிஓவிடம் தங்கள் கருத்துக்களை கூறினர்.
மாணவியின் தோழிகள், உறவினர்கள், கல்லூரி நிர்வாகம், விடுதி பணியாளர்கள் அனைவரிடமும் ஆர்டிஓ விசாரணை நடத்தினார். இதற்கிடையே உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று மாலை 5 மணியளவில் மீண்டும் மாணவியின் உறவினர்கள் மற்றும் புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். டிஆர்ஓ தர்ப்பகராஜ், ஆர்டிஓ பஷீர் மற்றும் அதிகாரிகள், மாணவியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.
tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக