திங்கள், 20 ஜனவரி, 2014

விஜய்: பெற்றோர்களை கடவுளாக வணங்குங்கள்

நடிகர் விஜய் சமீபத்தில் டுவிட்டர் இணைய தளம் மூலம் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ஒருவர் குறுக்கிட்டு விஜய்யை அவதூறாக திட்டினார். இதனால் விஜய்யும், அவரது ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனே, விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தலையிட்டு சம்மந்தப்பட்ட நபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இது பற்றிய தகவல் விஜய் காதிற்குச் சென்றது. ஆனால் விஜய்யோ சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டாராம். மேலும் அவரை மன்னித்து விட்டு விடும்படியும் கேட்டுக் கொண்டாராம். இதையடுத்து அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.
இது தொடர்பாக தனது ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், அனைவருக்கும் வணக்கம், நான் இந்த அறிக்கை கடிதத்தை ஒரு நடிகனாக உங்கள் முன் வைக்கவில்லை. உங்களின் சகோதரனாக, நண்பனாக முன் வைக்கிறேன். நேற்று உங்களிடம் பேசுவதற்காக சமுக வலைதளத்திற்க்கு வந்திருந்தேன். ஆனால் ஒரு சிலர் பேசிய வார்த்தைகள் என்னை மட்டும் அல்லாமல் சம்பந்தப்பட்ட என் நண்பரான அந்த நடிகரையும் கஷ்டப்படுத்தியது என்பது மறுக்கமுடியாத உண்மை. தகவல் அறிந்த என் நண்பரான அந்த நடிகர் உடனடியாக போனில் தொடர்புகொண்டு நீண்ட நேரம் பேசினார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாகதான் இருக்கின்றோம்.

அது போல் நீங்களும் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசையும். நேற்று சம்பந்தபட்ட அந்த நபரின் புகைப்படம் சமுக வலைதளஙகளில் பரவுவதாக கேள்விப்பட்டேன். இது ஒரு தனி நபருக்கு எதிரான செயல் ஆகும். இதை அனைவரும் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், ஏற்கனவே பகிர்ந்தவர்கள் அதை நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அந்த நபர் ரசிகர்களால் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார் எனவும் அறிந்தேன். இதெல்லாம் தேவை இல்லாத செயல் மற்றும் இது போல் இனி என் ரசிகர்கள் மட்டும் அல்ல எந்த ஒரு நடிகனின் ரசிகனும் ஈடுபட கூடாது.காவல் துறையில் ஒப்படைக்கப்பட்ட அந்த நபர் சிறிது நேரத்தில் விடுவிக்கப்படவும் கேட்டுக்கொண்டேன்.
அவர் மீது எந்த ஒரு புகாரும் பதிவாகவில்லை. ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது. அதை தகாத செயல்களில் ஈடுபட்டு உங்கள் வாழ்கையை கெடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களை தோல்களில் தூக்கி வளர்த்த பெற்றோர்களை முதல் கடவுளாக வணங்குங்கள். அடுத்ததாக உங்கள் வாழ்க்கையை கவனியுங்கள். இதை எல்லாம் தனிப்பட்ட நடிகனாக தெரிவிக்கவில்லை அனைவரின் சகோதரன் மற்றும் நண்பனாக தெரிவிக்கிறேன் நன்றி என இவ்வாறு விஜய் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக