திங்கள், 6 ஜனவரி, 2014

கல்யாண சமையல் சாதம் ! வித்தியாசமான முறையில் திருமணத்தை எடுத்துக் காட்டியுள்ளது

சமீபத்தில் வெளியான தமிழ்த் திரைப்படமான 'கல்யாண சமையல் சாதம்' படம் பார்த்த அனைவரின் பாராட்டையும் பெற்றது. இந்தப் படம் புதிய இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கத்தில் நடிகர் பிரசன்னாவும், நடிகை லேகா வாஷிங்டனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளிவந்திருந்தது. விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போகும் ஒரு ஜோடியினருக்கு ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட பிரச்சினையைக் கூறுவதாகப் படம் அமைந்திருந்தது.
இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் அதன் தயாரிப்புக் குழுவினரைத் தனது வீட்டிற்கு வரவழைத்துப் பாராட்டினார். காதல் காமெடிப்படமான இதன் தயாரிப்பாளர்கள் தான்தான் அவர்களுக்கு திரையுலகில் பெரிய ஈடுபாட்டை அளித்தது என்று தெரிவித்திருந்தனர். இதனைக் கேட்டதும் எனக்கு இந்தப் படம் நன்றாக ஓடவேண்டுமே என்ற நடுக்கம் தோன்றியது. ஆனால் பலரது பாராட்டுகளையும் பெற்று இந்தப் படம் வெற்றியடைந்ததை என்னிடம் கூறிய தயாரிப்புத்தரப்பு இனி நான் இதுகுறித்து கவலை கொள்ள வேண்டாம் என்றும் கூறினர் என்று தான் பேசும்போது நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.


கேஎஸ்எஸ் என்று பிரபலமடைந்துள்ள இந்தப் படம் திருமணத்தைப் பற்றி அழகாகக் கூறுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார். பல இளைஞர்கள் புகழ்பெற்ற இயக்குனர்களின் திரைப்படங்களைப் பார்த்து கருத்துகள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் கையில் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கும்போது தடுமாறி விடுகின்றனர். ஆனால் இந்த இளைஞர்கள் சினிமா புரிந்து பாராட்டியதுடன் அழகான திரைப்படம் ஒன்றையும் அளித்துள்ளார்கள் என்று கமல்ஹாசன் கூறினார். இந்தப் படம் வித்தியாசமான முறையில் திருமணத்தை எடுத்துக் காட்டியுள்ளது என்றும் அவர் பாராட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக