செவ்வாய், 21 ஜனவரி, 2014

வனிதா-ராபர்ட் திருமணத்தில் சிக்கல்

சென்னை:வனிதா  ராபர்ட் இணைவதில் சிக்கல் இருப்பதாலேயே அவர்கள் திருமணத்தை தள்ளிப்போட்டிருப்பதாக கூறப்படுகிறது.
விஜயகுமார்  மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா. இவர் பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். டிவி சீரியல் நடிகர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறான். கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஆகாஷை வனிதா பிரிந்தார். இருவரும் விவாகரத்து பெற்றனர். பின்னர் தொழிலதிபர் ஆனந்தராஜை அவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தாய் வனிதாவுடன் இருக்க மாட்டேன் எனக்கூறிய மகன் ஸ்ரீஹரி, தந்தை ஆகாஷிடம் சென்றான். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஸ்ரீஹரி விருப்பத்தின்படி ஆகாஷுடன் தங்கியிருந்தான். இதற்கிடையில் ஆனந்தராஜை விட்டு பிரிந்த வனிதா, மீண்டும் ஆகாஷை தேடி வந்தார். மகன் ஸ்ரீஹரிக்காக ஆகாஷுடன் சேர்ந்து வாழப்போவதாகவும் ஆனந்தராஜை பிரிந்துவிட்டதாகவும் சொன்னார்.
ஆனந்தராஜை வனிதா திருமணம் செய்தது விஜயகுமார் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனந்தராஜை வனிதா பிரிவதற்கு இதுவும் ஒரு காரணம். பின்னர் ஆனந்தராஜ¤டமிருந்து வனிதா விவாகரத்து பெற்றார்.

வனிதா-ஆகாஷ் மீண்டும் சேர்ந்துவிட்டதாக திரையுலகினர் நம்பியிருந்த நிலையில் வனிதாவின் புது காதல் விவகாரம் இப்போது வெளிவந்துள்ளது. கவர்ச்சி நடிகை அல்போன்சாவின் தம்பியும் டான்ஸ் மாஸ்டருமான ராபர்ட்டை வனிதா காதலிக்கிறார். இவர்கள் ரகச¤ய திருமணம் செய்ய இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இப்போதைக்கு திருமணம் கிடையாது என மறுத்துள்ளார் வனிதா. இவர்கள் திருமணத்துக்கு விஜயகுமார் குடும்பத்தார் எதிர்ப¢பு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. அதே சமயம், ஸ்ரீஹரியை மீண்டும் இழக்க நேரிடும் என வன¤தா அஞ்சுகிறாராம். இந்த பிரச்னைகளை தீர்த்த பின்பே ராபர்ட்டை கைப்பிடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். - See more at: tamilmurasu.org

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக