திங்கள், 20 ஜனவரி, 2014

கலைஞர் : ராமதாசுக்கு அவரது நாக்குதான் முதல் எதிரி !

சில பேருக்கு “நாக்கு”தான் முதல் விரோதி! ராமதாஸ் குற்றச்சாட்டு குறித்து கலைஞர் அறிக்கை!
திமுக தலைவர் கலைஞர் 20.01.2014 திங்கள்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
கேள்வி :- தி.மு. கழகத்தின் தூண்டுதலின் பேரில் விடுதலை சிறுத்தைகள், பா.ம.க.வினரைத் தாக்குவதாக டாக்டர் ராமதாஸ் குற்றஞ்சாட்டி யிருக்கிறாரே?
கலைஞர் :- இது அபாண்டமான அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டு. டாக்டர் ராமதாசுக்கு அண்மைக் காலத்தில் இப்படி தேவையில்லாமல் விமர்சனம் செய்கின்ற ஒரு கெட்ட பழக்கம் வந்து விட்டதுபோலும்! டாக்டர் ராமதாசின் நடவடிக்கைகள் பற்றி தி.மு. கழகத்தினர் எதுவும் சொல்வதில்லை இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகளைத் தூண்டிவிடுவதுதான் எங்கள் வேலையா? தி.மு.கழகத்திற்கு இப்படி வேறொருவரைத் தூண்டி விட்டு, தாக்குதல் நடத்தும்படி சொல்கிற ஈன புத்தி என்றைக்கும் கிடையாது. ராமதாசுக்கு அவரது நாக்குதான் அவரின் முதல் எதிரி !
அ.தி.மு.க. ஆட்சியில் பா.ம.க.வினர் மீது வழக்குகள் தொடுக்கப்பட்ட போது, தி.மு. கழகத்தின் சார்பில் அதைக் கண்டித்து கருத்து அறிவித்ததோடு, கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் அந்த வழக்குகள் எல்லாம் திரும்பப் பெறப்பட்டன. 1992ஆம் ஆண்டு பா.ம.க.வை வன்முறை இயக்கம் என்று அ.தி.மு.க. அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய போதுகூட, அதைக் கடுமையாக எதிர்த்தவன் நான். அதுவும் அம்பேத்கர் சிலையை உடைக்க தி.மு.க. காரணம் என்றெல்லாம் டாக்டர் ராமதாஸ் கூறுகிறார்.

அண்ணல் அம்பேத்கர் புகழினை உயர்த்த தி.மு.கழகம் எந்த அளவிற்குச் செயல்பட்டது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டுமானால் அவரது நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது, பல்கலைக் கழகங்களுக்கு அவரது பெயர் அமையப் பாடுபட்டது என்று ஏராளமாகச் சொல்லலாம். ஆனால் டாக்டர் ராமதாஸ் வன்முறை தி.மு.கழகத் திற்கு கை வந்த கலை என்று விமர்சனம் செய்திருக்கிறார். சில பேருக்கு “நாக்கு”தான் முதல் விரோதி! இவ்வாறு கலைஞர் கூறியுள்ளா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக