சனி, 11 ஜனவரி, 2014

தமன்னா: கார்த்தியோட நடிச்சதுதான் ரொம்ப பிடிக்கும்

தமிழில் கார்த்தியோட நடிச்சதுதான் ரொம்ப பிடிக்கும் என்றார் தமன்னா.‘சுறா‘, ‘பையா‘, ‘அயன்‘ என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வந்த தமன்னா கடந்த ஒன்றரை வருடத்துக்கும் மேலாக தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். தெலுங்கு, இந்தி படங்களில் மட்டும் கவனம் செலுத்தினார். காதல் தோல்வியால்தான் அவர் தமிழ் படங்களில் நடிக்க மறுக்கிறார் என கிசுகிசு பரவியது. இந்நிலையில், அஜீத் நடிக்கும் ‘வீரம்‘ படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். இந்நிலையில், தமிழ் ஹீரோக்களுடன் நடித்த அனுபவம் பற்றி தமன்னா மனம் திறந்தார். அவர் கூறியதாவது:
வீரம் படத்தில் எனது கேரக்டர் மிகவும் பிடித்தது. இப்பட இயக்குனர் சிவா இயக்கிய ‘சிறுத்தை‘ படத்தில் ஏற்கனவே நடித்திருக்கிறேன். அஜீத், லைட்பாய் முதல் எல்லா ஊழியர்களிட மும் பாகுபாடு இல்லாமல் சமமாக பழகுவார். சூர்யாவுடன் ‘அயன்‘ படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். அவரது தம்பி கார்த்தியுடனும் நடித்திருக்கிறேன். இருவருமே அவரவர் குணம் மற்றும் வேலை செய்வதில் வித்தியாசமானவர்கள்.

தமிழில் நான் நடித்த படங்களிலேயே கார்த்தியுடன் நடித்த ‘பையா‘ படம்தான் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதில் எனது கேரக்டர் மறக்க முடியாது. ‘சுறா‘வில் விஜய்யுடன் நடித்தேன். அவர் மென்மையான மனிதர். இந்தி படங்களிலும் நான் நடித்து வருகிறேன். ஆனால் தென்னிந்திய படங்களில் நடிப்பதையே அதிகம் விரும்புகிறேன்.
tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக