ஞாயிறு, 12 ஜனவரி, 2014

நமீதா தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல்

நடிகை நமீதா தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் நடிகர்– நடிகைகள் பிரசாரத்தில் ஈடுபடுத்த அரசியல் கட்சிகள் வரிந்து கட்டுகின்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர்– நடிகைகள் பலர் பிரசாரம் செய்தனர். அ.தி.மு.க.வுக்கு நடிகர்கள் செந்தில், ஆனந்தராஜ், பொன்னம்பலம், சிங்கமுத்து, நடிகை விந்தியா போன்றோர் ஆதவு திரட்டினர். தி.மு.க.வுக்கு ஆதரவாக சந்திரசேகர், வடிவேலு போன்றோர் பிரசாரம் செய்தனர். வரும் பாராளுமன்ற தேர்தலில் நடிகை குஷ்பு, டைரக்டர் டி.ராஜேந்தர் ஆகியோர் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய களம் இறங்க உள்ளனர். நமீதாவையும் தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரத்தில் இறக்கி விட முயற்சி நடக்கிறது. நமீதா விரைவில் அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்து உள்ளார். எந்த கட்சியில் சேருவேன் என்பதை அடுத்த மாதம் வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார். தி.மு.க.வில் அவர் சேர்வார் என கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக