ஞாயிறு, 12 ஜனவரி, 2014

தமிழருவி மணியனின் பயம் : திமுகவுடன் இணைந்தால் தேமுதிக காணாமல் போய்விடும்

வருகின்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தால் தேமுதிக காணாமல் போய்விடும் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொற்பொழிவுகள், எழுத்துகள் அடங்கிய "வெல்லும் சொல்', "என் அண்ணா', "புரட்சிக் கதிர்கள்' ஆகிய 3 நூல்கள் வெளியிடப்பட்டன.
இவ்விழாவில் தமிழருவி மணியன் பேசியதாவது:
தமிழக அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டுமானால் வரும் மக்களவைத் தேர்தலில் நல்ல அணி அமைய வேண்டும். அந்த அணியில் பாஜக, மதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் இணைய வேண்டும். அப்படி இணைந்தால் அந்த அணிதான் வெற்றி பெறும். ம்ம்ம் தான் சீக்கிரமே காணமல் போய்விடுவேனோ  என்று  பயப்படுவது புரிகிறது 
வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக அணிக்கும், பாஜக தலைமையிலான அணிக்கும் இடையே போட்டி இருக்கும். தேமுதிக-வை இழுக்க திமுக பெரும் முயற்சி செய்கிறது. திமுக-வை நம்பி சென்றால் 2014-ஆம் ஆண்டு தேர்தலோடு தேமுதிக காணாமல் போய்விடும் என்றார் தமிழருவி மணியன். இந்நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், மூத்த தலைவர் இல.கணேசன், மாநில பொதுச்செயலாளர் எஸ்.மோகன்ராஜூலு, வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜி. விஸ்வநாதன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், எழுத்தாளர்கள் மதுரா, இர. பத்மலட்சுமி, திரைப்பட இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் நிறைவாக வைகோ, வெளியிடப்பட்ட 3 நூல்கள் பற்றி விரிவாக பேசினார் dinamani.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக