வியாழன், 23 ஜனவரி, 2014

கெஜ்ரிவாலுக்கு சிதம்பரம் அறிவுரை ஆட்சி செய்ய முடியாவிட்டால், பதவி விலகுங்கள்:


டாவோஸ்: ‘ஆளும் திறமையின்மையை தெருப் போராட்டத்தால் மறைக்க இயலாது, ஆட்சி செய்ய முடியவில்லை என்றால், பதவி விலகுங்கள்' என கெஜ்ரிவாலை விமர்சித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். கட்சி ஆரம்பித்த ஓராண்டுக்குள் டெல்லியில் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு மக்களின் ஆதரவைப் பெற்றது ஆம் ஆத்மி. இந்நிலையில், டெல்லியில் சரியாக செயல்படாத போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் போராட்டத்தில் இறங்கினார் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால். டெல்லியின் முக்கிய சாலையில் நடைபெற்ற இந்த தர்ணாவால் டெல்லி ஸ்தம்பித்தது. கிட்டத்தட்ட 30 மணி நேரம் நடைபெற்ற அவரது போராட்டம் பின்னர் துணை நிலை ஆளுநரின் வேண்டுகோளை ஏற்று வாபஸ் பெறப்பட்டது. ஆட்சி செய்ய முடியாவிட்டால், பதவி விலகுங்கள்: கெஜ்ரிவாலுக்கு சிதம்பரம் அறிவுரை இந்நிலையில், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கெஜ்ரிவால் மேற்கொண்ட இந்தப் போராட்டம் பல எதிர்மறையான விமர்சனங்களுக்கும் வழி வகுத்துள்ளது. அந்த வகையில், கெஜ்ரிவாலின் போராட்டம் குறித்து சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தில் கலந்துகொள்ள சென்றுள்ள மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியதாவது:- டெல்லி அரசில் இருக்கிறபோது, நீங்கள் ஆட்சி செலுத்தவேண்டும். உங்களால் ஆட்சி செலுத்தமுடியவில்லை என்றால், உடனே பதவியை விட்டு விலகுங்கள். தெருப்போராட்டத்தால் உங்களது ஆளும் திறமையின்மையை மறைக்க முடியாது. கடந்த சில நாட்களில் கெஜ்ரிவால் அராஜகத்தின் உச்சிக்கே சென்றுள்ளார்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/india/if-you-can-t-govern-just-quit-chidambaram-s-message-kejriwal-191925.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக