திங்கள், 27 ஜனவரி, 2014

அழகிரி பிறந்த நாள் விழா ! கலக்கத்தில் திமுக ! விழாவில் பங்கேற்றால்...கலைஞர் கடும் எச்சரிக்கை !

அழகிரி பிறந்த நாள் ொண்டாட்டத்தில் பங்கேற்கக் கூடாது' என, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கும், இதர நிர்வாகிகளுக்கும், கட்சி மேலிடம் கண்டிப்பான உத்தரவு பிறப்பித்து உள்ளது. தி.மு.க.,வின் தென்மண்டல அமைப்புச் செயலராக இருந்த அழகிரியின் ஆதரவாளர்கள், மதுரையில் ஒட்டிய, சர்ச்சைக்குரிய போஸ்டர்கள் காரணமாக, மதுரை மாநக தி.மு.க., கலைக்கப்பட்டதோடு, அழகிரியின் ஆதரவாளர்கள் சிலரும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதற்காக நியாயம் கேட்க, கோபாலபுரம் இல்லத்திற்கு சென்ற அழகிரி, அங்கு, கருணாநிதியுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை அடுத்து, கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். தி.மு.க., மேலிடத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்கு சற்றும் கலங்காத, அழகிரியின் ஆதரவாளர்கள், வரும், 30ம் தேதி, அழகிரியின் பிறந்த நாளை பிரமாண்ட அளவில் கொண்டாட, ஏற்பாடு செய்து வருகின்றனர். அத்துடன், கட்சியிலிருந்து, "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட அழகிரியும், மாவட்ட வாரியாக, கட்சியின் முன்னணி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசி, ஆதரவு திரட்டி வருகிறார்   எதிர் பாராத வகையில் பல திமுக புள்ளிகள், அழகிரிக்கு ஆதரவு கரம் நீட்டும் போது, கலைஞர் பெரிய அதிர்ச்சியை சந்திக்க போகிறார்.

/> இதனால், ஸ்டாலினுக்கு எதிராக, அவர் பலப்பரீட்சைக்கு தயாராகி வருவதாக, தி.மு.க., வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.மேலும், வரும், 30ம் தேதி, தன் பிறந்த நாளை கொண்டாட உள்ள அழகிரி, அன்றைய தினம், தன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, ஆலோசிக்க உள்ளார். மறுநாள், பத்திரிகையாளர்களை அழைத்து, தி.மு.க.,வில், ஸ்டாலின் கோஷ்டியினர் கட்சிக்குள் நடத்தி வரும், தில்லுமுல்லு வேலைகள் தொடர்பான ஆதாரங்களை வெளியிடப் போவதாகவும் கூறியுள்ளார்.அவரின் இந்த அறிவிப்பால், வரும், 30ம் தேதி, தி.மு.க.,வில் பெரும் சலசலப்பு உருவாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.அழகிரியை கட்சியிலிருந்து நீக்கிய தினத்தன்று, பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்த, தி.மு.க., தலைவர், கருணாநிதி, "அழகிரியின் நீக்கத்தால், கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது' என, தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு, தெம்பு ஏற்படும் வகையில் பேட்டி அளித்தார். ஆனாலும், ஒரு விதமான கலக்கம், தி.மு.க.,வில் குடிகொண்டுள்ளது.


எனவே, "அழகிரி பிறந்த நாள் விழாவில், தென்மண்டல, தி.மு.க., மாவட்ட செயலர்கள் மற்றும் கட்சி நிர்வாகி கள் யாரும் பங்கேற்கக் கூடாது; அதை மீறி பங்கேற்றால், கடும் நடவடிக்கை பாயும்' என, கருணாநிதி எச்சரித்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.குறிப்பாக, மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட, கட்சி யின் 12 தென் மாவட்டங்களைச் சேர்ந்த செயலர்களுக்கு, இந்த எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டு, அவர்கள் மூலம், கட்சியின் மற்ற நிர்வாகிகளுக்கு, அது தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில், கட்சித் தலைமையின் உத்தரவை புறக்கணிக்கும் வகையில், அழகிரி பிறந்த நாள் விழாவுக்கு, தென் மாவட்ட தி.மு.க., செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரை அழைத்து வரவும், தொண்டர்கள், கார்கள் மற்றும் வேன்களில் அழைத்து வரவும், அவரின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். இந்த பலப்பரீட்சையில் வெற்றி பெறப் போவது, அழகிரியா அல்லது கட்சி மேலிடமா என்பது, 30ம் தேதி தெரிந்து விடும். கலக்கத்தில் திமுக 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக