வியாழன், 23 ஜனவரி, 2014

ஆம் ஆத்மி கட்சியால் BJP க்கு அச்சுறுத்தல் இல்லை-அருண் ஜெட்லி ! அழுதுருவேன் நான் ரொம்ப நல்லவென்

பாரதீய ஜனதாவின் அருண் ஜெட்லி:
பாரதீய ஜனதாவால் மட்டுமே  நிலையான ஆட்சியை தர முடியும். பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க மறுத்து ஒரு பார்வையாளராக உள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பற்ற தன்மை மற்றும் காங்கிரஸ் சராணாகதி மூலம்  எவ்வாறு ஸ்திரமான அரசை வழங்க முடியும். கடந்த சில ஆண்டுகளில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி செயல்திறன் மிகவும் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது .
அனைத்து தேர்தல் கணிப்புகளிலும் நரேந்திர மோடி 2014 பொது தேர்தலில் செல்வாக்கு பெற்ற தலைவராக உள்ளார் என்றும் . மற்ற தலைவர்கள் அவருக்கு பின்னால் உள்ளனர் என்றும் கூறுகிறது. பல மாநிலங்களில் காங்கிரஸ் தனது பலத்தை இழந்து விட்டது.  தமிழ்நாடு, ஒரிசா, மேற்கு வங்காளம் மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில்  தற்போதைய கருத்து கணிப்புக்கள் படி பாரதீய ஜனதா கட்சி  பலம் குறைவாக உள்ளது வரும் தேர்தலில்  பாரதீய ஜனதா குறிப்பிடதக்க வகையில் ஓட்டுக்களை பெறும்.
அரசியல் களத்தில் ஆம் ஆத்மி கட்சி உள் பட எந்த புதிய வரவுகளாலும் பாரதீயஜனதாவுக்கு  அச்சுறுத்தல் இல்லை. dailythanthi.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக