புதன், 1 ஜனவரி, 2014

கேப்டன் 300 கோடி கேக்கறதா பேச்சு ! பிஜேபி அதிர்ச்சியாயிட்டாங்க


Captain_vijayakanth__13 கேப்டன் என்ன நிலைபாட்டில் இருக்கார் ? " என்றான் ரத்னவேல்.

"கேப்டன் ஒரு விஷயத்துல தீர்மானமா இருக்கார்.  எந்தக் கட்சி நெறய்ய பணம் குடுக்குதோ, அந்தக் கட்சி கூட போறதுன்றதுல தெளிவா இருக்கார். கேப்டன் கிட்டத்தட்ட 300 கோடி கேக்கறதா பேச்சு.  பிஜேபி இந்தத் தொகையைக் கேட்டு அதிர்ச்சியாயிட்டாங்க. இவ்வளவு தொகையை கேப்டனுக்கு கொடுக்கறதுக்கு, வேற எங்கயாவது அதை செலவு பண்ணலாம்னு நினைக்கிறாங்க.  அது தவிரவும், வைகோவை பிஜேபி பக்கம் இழுத்தா, அவர் விசுவாசமான அடிமையா இருப்பதைப் போல கேப்டன் இருக்க மாட்டாருன்னும் நம்பறாங்க"
"விஜயகாந்த் திமுகவிடம் 19 சீட் கேட்டதா ஒரு பேச்சு வருதே"
"விஜயகாந்த் 19 சீட்டெல்லாம் கேக்கலை.  15 சீட் கேக்கறார்.  திமுக எட்டுல இருந்து பேச்சுவார்தையை தொடங்கியிருக்காங்க. கேப்டன் கேட்ட தொகையையும் கொடுக்க தயாராயிட்டாங்க. இந்த முறை மத்தியில அதிகாரத்தை கைப்பற்றவில்லை என்றால், மகளையும் கட்சியையும் காப்பாற்ற முடியாதுன்றதுல திமுக தலைமை தெளிவா இருக்கு. அதனால, எப்படியாவது கேப்டனை வளைச்சு போடணும்னு தீர்மானமா இருக்காங்க"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக