புதன், 1 ஜனவரி, 2014

திமுக. தேமுதிக தொகுதி பேச்சுவார்த்தை ! 1 9 கேட்கும் தேமுதிக ..7 + ஒரு ராஜ்யசபா சீட் திமுக பேரம் !.அனேகமாக 9 அல்லது 12 OK ?

திமுக அணியில் தேமுதிகவை இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் தொகுதி பேர பேச்சுவார்த்தை மும்முரமடைந்திருக்கிறது. லோக்சபா தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதில் அதிமுக முனைப்பாக இருக்கிறது. இதனால் அதன் கூட்டணிக் கட்சிகளாக கருதப்படும் இடதுசாரிகளுக்கு அனேகமாக தலா ஒரு இடம் ஒதுக்கப்படலாம். திமுகவோ, பாஜக- காங்கிரஸுடன் கூட்டணி இல்லவே இல்லை என்று அறிவித்துவிட்டது. தற்போதைய நிலையில் திமுக அணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்றவைதான் இருக்கின்றன. தேமுதிகவைப் பொறுத்தவரையில் எந்த அணியில் இணைவது என்ற முடிவு எடுக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தேமுதிகவை பாஜக அணியில் இணைக்க தமிழருவி மணியன் முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்
அதேபோல் தமிழகத்தில் தனித்துவிடப்பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியும் தமது அணியில் தேமுதிகவை இணைத்துவிடுவது என கங்கணம் கட்டிக் கொண்டு காத்துக் கிடக்கிறது.

இந்த நிலையில்தான் தேமுதிக நடத்திய கிறிஸ்துமஸ் விழாவில் திமுக அனுதாபியான எஸ்றா சற்குணம் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்றா சற்குணம், கேப்டன் பி.ஜே.பி-யுடன் கூட்டணி சேரப்போவதாக சொல்றாங்க. ஆனா பி.ஜே.பி-ங்கிறது பிராமண சாதிக் கட்சி. அவங்ககூடப் போக வேண்டாம். இதை யோசித்து விரைவில் நல்ல முடிவு எடுப்பார் வெள்ளை உள்ளம் படைத்த கறுப்பு எம்.ஜி.ஆர். என்றார். விஜயகாந்தும் தனது பேச்சில், சற்குணம் ஐயா ஒரு கருத்தை சொல்லி இருக்காங்க அதை நான் பரிசீலிக்கறேன்' என்று சொல்லி இருந்தார்.
இதன் பின்னர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், திமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற வேண்டும். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்
திருமாவளவனின் இப்பேச்சு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கருணாநிதியும் அது அவருடைய நல்லெண்ணத்தின் அறிகுறி. அப்படி ஒரு வாய்ப்பு ஏற்பட்டால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று அதிகாரப்பூர்வமாகவே கருத்தை தெரிவித்தார்.
பகிரங்கமாக இப்படி கருத்துகள் தெரிவிக்கப்பட்ட போதும் திரைமறைவில் திமுக- தேமுதிக இடையே தொகுதிப் பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தை மும்முரமாக நடைபெற்று வருவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிகவைப் பொறுத்தவரையில் முதல் கட்டமாக 19 தொகுதிகளை திமுகவிடம் கேட்டிருக்கிறதாம். ஆனால் தேமுதிகவின் இந்த கோரிக்கையை திமுக நிராகரித்துவிட்டதாம்
தேமுதிகவுக்கு 2வது பெரிய கட்சி என்ற அந்தஸ்துடன் 7 தொகுதிகளையும் ஒரு ராஜ்யசபா சீட்டையும் கொடுக்க திமுக முன்வந்திருக்கிறதாம்.
இந்த பேச்சுவார்த்தை நீடித்து அனேகமாக தேமுதிகவுக்கு 9 முதல் 12 தொகுதிகள் ப்ளஸ் ஒரு ராஜ்யசபா சீட் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக