திங்கள், 2 டிசம்பர், 2013

Obama மகள்களோடு வரிசையில் நின்று புத்தகங்கள் வாங்கினார் ! நம்ப அரசியல்வாதிகளே கொஞ்சம் civilize ஆகுங்க !

வாஷிங்டன்:சாதாரண உடையில், டிராபிக்கில் காரில் சென்று மகள்களுக்காக புத்தகங்கள் வாங்கினார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.
அமெரிக்காவில் நன்றி தெரிவிக்கும் நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சிறு சிறு பரிசு பொருட்களை அமெரிக்கர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்வர். இதற்கான விற்பனையை மேம்படுத்தும் விதமாக பல்வேறு வணிக நிறுவனங்கள், தள்ளுபடியை அறிவித்துள்ளன. பெரும்பாலான அமெரிக்கர்கள் இந்த விழாவின்போது, தங்களுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலையில் வாங்கிக் கொள்வது வழக்கம். இதனால் அங்கு கடைகளில் பெரும் கூட்டம் காணப்படுகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும், இந்த தள்ளுபடி விற்பனையில் தனது மகள் சாஷா, மாலியா ஆகியோருக்கு பொருட்களை வாங்குவதற்காக, அவர்களை அழைத்து கொண்டு நேற்று முன்தினம் காரில் சென்றார். சாதாரண உடையில் அவர், எந்தவித பாதுகாப்பு கெடுபிடியும் இல்லாமல் டிராபிக்கில் சென்றார். இயல்பாக டிராபிக் சிக்னல்களில் நின்று வடக்கு வாஷிங்டன் பகுதியில் அமைந்துள்ள புத்தக கடைக்கு அவர்கள் சென்றனர்.


அங்கு அதிபரும், அவரது மகள்களும் ஏராளமான புத்தகங்களை வாங்கினர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜூம்ப லகரி எழுதிய ‘சமவெளி’, கார்ல்சென் மெக்கல்லர்ட் எழுதிய ‘வருந்தும் கபேயின் பாடல்கள் மற்றும் கதைகள்’ உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட புத்தகங்களை வாங்கினர்.
பின்னர் பிற வாடிக்கையாளர்களுடன் வரிசையில் நின்று புத்தகங்களுக்கு பில் போடுவதற்காக காத்திருந்தனர். அவர்களை கண்ட வாடிக்கையாளர்கள் தங்களது செல்போனில் ஒபாமா குடும்பத்தினரை படம் பிடித்து மகிழ்ந்தனர். வரிசையில் நின்று கவுன்டருக்கு வந்த ஒபாமா குடும்பத்தினரின் பொருட்களுக்கான பில்லை கடை ஊழியர் கணக்கிட்டு ரசீது வழங்கினார்.

இதுகுறித்து ஒபாமா கூறுகையில், ‘எனது மகள்களின் புத்தக பட்டியல் மிக நீளமாக இருந்தது. நான் 5 முதல் 52 வயது வரையிலான பல்வேறு வயது பிரிவுகளில் உள்ள புத்தகங்களை தேர்வு செய்தேன்’ என்றார்.கடந்த ஆண்டு நன்றி தெரிவிக்கும் விழா விற்பனையில், அமெரிக்கர்கள் சுமார் ரூ.34 ஆயிரத்து 313 கோடியை செலவழித்தனர் என்று அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவித்துள்ளது. ஒபாமா தனது டுவிட்டரில், ‘நாட்டின் சிறு வணிகம் சிறப்பாக இருந்தால்தான் நாடு சிறப்பாக இருக்கும்’ என்று எழுதியிருந்தார்’ என்பது குறிப்பிடத்தக்கது. -tamilmurasu.org/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக